/tamil-ie/media/media_files/uploads/2020/10/Tamil-Serial-News-Sembaruthi-Aadhi-Parvathi.jpg)
செம்பருத்தி சீரியல்
செம்பருத்தி சீரியல்
Tamil Serial News: இளம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி என்றால் அது ஆதியும் பார்வதியும் தான். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலின் ஹீரோ - ஹீரோயின் தான் அவர்கள்.
முடிவுக்கு வந்தது சர்ச்சை.. எம்.எல்.ஏ பிரபுவுடன் செளந்தர்யா செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி!
பணக்கார வீட்டு பையன் ஆதியும் அதே வீட்டில் வேலை செய்யும் பார்வதியும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள். முதலில் திருமணம் குறித்து யாருக்கும் தெரியாமல் இருந்தாலும், பின்னர் ஆதியின் அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு தெரிய வருகிறது. பின்னர் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். வாடகை வீட்டில் தங்கியிருந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். சின்னச் சின்ன ரொமான்ஸ் காட்சிகளுடன் இளைஞர்களை குஷிப்படுத்தும் வகையில் காட்சிகளும் இருக்கின்றன. ஆதியின் வீட்டில் மோட்டர் வேலை செய்யாததால் தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது. தெரு குழாயில் போய் தண்ணீர் குடம் தூக்கி வரும் பார்வதி, மாடி ஏறும் போது கால் தடுக்கி விழுகிறார். இதில் காலில் சுளுக்கு ஏற்பட்டு வலியோடு நொண்டி நொண்டி நடக்கிறார்.
வேலைக்கு போன ஆதி இரவில் வீட்டிற்கு வந்ததும் பார்வதியின் காலை பார்த்து பதறிப் போகிறார். பிறகு பார்வதியை உட்கார வைத்து காலில் மருந்து தடவி விடுகிறார். பார்வதியை உட்கார வைத்துவிட்டு, குடங்களை எடுத்துக் கொண்டு வரிசையில் நின்று இரண்டு இரண்டு குடங்களாக தண்ணீர் பிடித்து வந்து ட்ரம்மை நிரப்பி வைக்கிறான் ஆதி.
பின்னர் பார்வதியை ரூமுக்குள் இருந்து தூக்கி வந்து தண்ணீர் டிரம்மை காட்ட, அதனை பார்த்த பார்வதி, ஆதியை கட்டிப்பிடிக்க அங்கு மீண்டும் ரொமான்ஸ். இதற்கிடையே தன் தாயை கொலை செய்ய முயன்றதால் வனஜாவை சிறையில் அடைக்கிறான் ஆதி. வனஜா மீது கோபத்தில் இருந்த அகிலாண்டேஸ்வரி அவளைப் பார்க்க செல்கிறார். கோபமாக இருந்த அகிலாண்டேஸ்வரியிடம் பாசமாக பேசி, தன்னை சிறையில் இருந்து வெளியே விடுவிக்க வைக்கிறாள் வனஜா.
நாமினேஷன் லிஸ்டில் புதிதாக 4 பேர் -பிக் பாஸ் ப்ரோமோ
இந்த விஷயம் ஆதிக்கு தெரியவர, வனஜா மற்றும் நந்தினியை கையும்களவுமாக மாட்டிவிட வேண்டும் என புது பிளான் போடுகிறான். அடுத்து என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.