Vijay TV Bharathi Kannamma : பாரதி கண்ணம்மா சீரியலில், பொய் பொய்யா... பொய் பொய்யா சொல்லுறியே வெண்பான்னு கதை போனாலும்.. நம்ப மாட்டேன் நம்ப மாட்டேன் என ஒரு முறை கூட பாரதிக்கு வெண்பா மீது சந்தேகமே வரல. இது தான் பாரதி கண்ணம்மா 200 வது எபிசோட் தாண்டியும் வெற்றி நடை போடுமளவுக்கு நகர்த்திக்கொண்டு போயிருக்கிறது. பாரதியை வெண்பா படிக்கும்போதே லவ் பண்ணினா. பாரதி வேறு பெண்ணை காதலிச்சான்.
’திருமணம் டூ சித்தி 2’ : இவ்வளவு சின்ன வயதில் பெரிய உயரத்தை அடைந்த வெண்பா!
அந்த பெண்ணை பழிவாங்க கிளம்புகிறாள் வெண்பா. வெண்பா செட்டப் செய்த விபத்தில் அந்த பெண்ணோடு சேர்ந்து பாரதியும் மாட்டிக்கறான். ஆனால், உயிர் பிழைத்து விடுகிறான். பாரதி தன்னை விட்டு போக கூடாதுன்னு, பாரதிக்கு குழந்தை பிறக்காதுன்னு வெண்பா பொய்யா சர்டிபிகேட் குடுத்து விடுகிறாள். வெண்பாவும் டாக்டர்.. பாரதியும் டாக்டர். வெண்பாவை அப்படியே முழுசா நம்பி இன்னொரு டாக்டர் ஒப்பீனியன் கூட கேட்காம இருக்கான் பாருங்க பாரதி, அங்கே ஆரம்பிக்குது கதையில் முட்டாள்தனம்.
இதே வெண்பா.. பாரதியின் பொண்டாட்டி கண்ணம்மாவுக்கும் குழந்தை பிறக்காதுன்னு சர்டிபிகேட் கொடுத்து, உன் மேல சந்தேகம் வரக்கூடாதுல்ல பாரதி அதுக்குத்தான் இப்படி ஒரு சர்டிபிகேட்ன்னு சொல்லி சமாளிக்கறா. அப்போதும் வெண்பாவின் மேல சந்தேகம் வரலை பாரதிக்கு. இவ்வளவு ஏன்.. கண்ணம்மாவின் பள்ளித் தோழன் ஒருவனுடன் வெண்பா அவளை இணைச்சு பேச அப்போது கோபமா பேசறான் தவிர, வெண்பா எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்யறான்னு கொஞ்சமும் யோசிக்கலை.
கொரோனா பாதிப்பு எதிரொலி – ரெப்போ வட்டி விகிதம் அதிரடி குறைப்பு
இப்போ...ஒரு பெண்ணின் புருஷன் தனது மனைவியின் கர்ப்ப சர்டிபிகேட் மீது சந்தேகப்பட்டு, இந்த குழந்தையை அபார்ட் பண்ணிடுங்க சார்.. யாரோ ஒருத்தன் குழந்தைக்கு நான் அப்பான்னு சொல்லிக்க விரும்பலைன்னு சொல்ற அளவுக்கு நிலைமையை கொண்டு வந்து விட்டு இருக்கா வெண்பா. இப்போதும் பாரதி நல்லவனா இருந்தா என்ன செய்து இருக்கணும்? இது அவளோட ஒப்பீனியன். இதுல நாம எதுக்கு அப்செட் ஆகணும்னுதானே நினைக்கணும் இயக்குநரே? இப்போது மட்டும் பாரதி அப்செட் ஆவது ஏனோ?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"