’சாக்லேட்’: விட்டுக் கொடுத்துட்டா.. இப்போ தட்டிப் பறிக்க நினைச்சா?

அம்மா, பிள்ளை, காதலி மூணு பேரும் சேர்ந்து இனியவை காதலிக்கற மாதிரி நடிச்சு கல்யாணமும் செய்துக்கணும்னு முடிவெடுத்துட்டாங்க.

அம்மா, பிள்ளை, காதலி மூணு பேரும் சேர்ந்து இனியவை காதலிக்கற மாதிரி நடிச்சு கல்யாணமும் செய்துக்கணும்னு முடிவெடுத்துட்டாங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chocolate serial, sun tv

Chocolate serial, sun tv

Chocolate Serial : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சாக்லேட் தொடர் ஒரு கறுப்பு பெண் இனியா பற்றிய கதை. கறுப்பு பெண் என்றாலும், இவளை கறுப்பு என்று யாரும் ஒதுக்கவில்லை. பிறகு எதற்காக இதை கதையில் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்பது தொடர் ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகியும் புரியாத புதிராக இருக்கிறது. சன் டிவியில் சாக்லேட் தொடரை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கார். இதனால் பெரும் எதிர்ப்பார்ப்பை இந்த சீரியல் உண்டாக்கி இருக்கு. தெலுங்கு மொழியில் ஒளிபரப்பான சீரியலின் மொழியக்கம்தான் சாக்லேட். தெலுங்கிலும் இந்த சீரியலின் பெயர் சாக்லேட் தான்.

Advertisment

யோகாசனத்தில் முத்தம்: ரகுல் ப்ரீத் சிங்கின் வைரல் வீடியோ

சாக்லேட் என்கிற டைட்டிலுக்கு ஏற்ப இனியாவை கருப்பாக காண்பித்து கதையை ஆரம்பித்து இருக்கிறார்கள். இனியா இனிப்பகம் என்று பெயர் வைத்து, சாக்லேட்டில் மட்டுமே சுவீட் செய்யும் திறமை பெற்றவள் இனியா. குடும்பமே இந்த தொழிலை செய்து வருகிறார்கள். இப்படி சாக்லேட்டில் சுவீட் செய்வது என்பது அரிது என்று, இந்த பிஸினெஸில் ஜெயிக்கத் திட்டம் போடுகிறார் விக்ரமின் அம்மா.

விக்ரம் குடும்பத்தின் பிசினெஸ் நொடிச்சுப் போச்சு.. அப்பா கடனுக்கு பயந்து தலை மறைவாயிட்டார். இப்போ பிசினெஸை தூக்கி நிறுத்தணும்... கடன் தொல்லைகளில் இருந்து வெளியே வரணும்னு அம்மாவும், விக்ரமும் சேர்ந்து திட்டம் போடறாங்க. விக்ரமை பல்லவி காதலிக்கிறாள். ஆனால், சாக்லேட் சுவீட் செய்யும் ரகசியத்தை கற்றுக்கொண்டு அந்த பிஸினெஸில் ஜெயிச்சே ஆகணும்னு திட்டம் போட்டு, ஒரு வழியா அம்மா, பிள்ளை, காதலி மூணு பேரும் சேர்ந்து இனியவை காதலிக்கற மாதிரி நடிச்சு கல்யாணமும் செய்துக்கணும்னு முடிவெடுத்துட்டாங்க.

கல்யாணம் ஆனால்தான் இனியாவிடம் இருந்து சாக்லேட் சுவீட் செய்யும் வழிமுறையை கற்றுக்கொள்ள முடியும்னு திட்டம் போட்டு, இனியாவை காதலிக்க விக்ரம் வேஷம் போட்டு அவள் வீட்டுக்கு போறான்.கடைசியில் இனியாவும் விக்ரமை காதலிக்க ஆரம்பிச்சு, இப்போ கல்யாணமும் முடிஞ்சுருச்சு. ஆனால், முதலிரவு மட்டும் நடக்க கூடாதுன்னு கார்த்திக்கின் காதலி பல்லவி முதல் ராத்திரி அன்னிக்கு விக்ரமை உசுப்பி விட்டுக்கிட்டே இருக்க. விக்ரம் கிளம்பி வெளியில் போயிடறான். காதலிச்ச பல்லவி கார்த்திக்கை விட்டுக் கொடுக்க மனசில்லாமல் தவிக்கிறாள்.

Advertisment
Advertisements

பிசினெஸ்.. பணம் இதெல்லாம் எப்படி மனிதர்களை ஆட்டுவிக்கிறது என்பதற்கு சாக்லேட் சீரியல் நல்ல உதாரணம். காதலியே காதலனை பிஸினஸுக்காக வேறு பெண்ணை கல்யாணம் செய்துக்கொன்னு சொல்றதும், பிறகு வா நம் கல்யாணம் செய்துக்கலாம்னு சொல்றதும்... பெத்த அம்மாவும் இதை செய்ய ஐடியா கொடுப்பதும் என்று நல்லா இல்லை. அவங்களுக்கு தொழில்னு வரும்போது எல்லாம் ரைட்டுன்னு நினைப்பு.

இன்றைய செய்திகள் Live : 7 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் – ஸ்டாலின் வேண்டுகோள்

விக்ரம் பல்லவி போனை எடுக்காமல் வேலையில்தான் பிசியா இருக்கான். ஆனால், பல்லவிக்கு புது பொண்டாட்டி வந்த உடனே தன்னை மறந்துட்டான்னு நினைப்பு. விபத்துன்னு யாரையோ வச்சு போன் பண்ண வைக்கிறாள். அவன் விழுந்தடிச்சு பதறிக்கிட்டு ஓடி வருகிறான். அங்கே பார்த்தால் பல்லவி ஒரு கீறல் இல்லாமல் நிக்கறா. கேட்டால், என் மேல அக்கறை இருக்கான்னு டெஸ்ட் பண்ணினேன்னு சொல்றா. என்னடா பொண்டாட்டி கருப்பா இருந்தாலும் கலையா இருக்காளே.. விக்ரம் மயங்கி விழுந்துருவானோன்னு நினைச்சேன். அப்பாடா அப்படி இல்லைன்னு சொல்றா. விட்டுக் கொடுத்தாச்சு.. கல்யாணம்னா விளையாட்டாய் போச்சா ? இப்போ அவ புருஷனைத் தட்டி பறிக்கற கதையாவுல்ல இருக்குது!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Tv Serial Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: