Tamil Nadu news today live updates 8 food processing projects in TN தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழில்கள் தொடர்பான 8 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ. 220 கோடி மதிப்பில் உருவாக உள்ள இந்த திட்டங்களின் வாயிலாக 8000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டங்களின் மூலமாக சுமார் 32 ஆயிரம் விவசாயிகள் நன்மை அடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ. 301 கோடி மதிப்பிலான 10 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதான் மந்திரி கிஸான் சம்பதா யோஜானா என்ற திட்டத்தின் கீழ் இந்த தொழில்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அக்ரிகல்ச்சுரல் மார்க்கெட்டிங் மற்றும் அக்ரி பிசினஸ் ஆணைஇயர் சுன்சோன்கம் ஜதக் சிறு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிங்காரச் சென்னை வரலாறு
சென்னையின் புராதானங்கள் என்ன? சென்னையின் வரலாறு என்ன? பன்முகத் தன்மை கொண்ட தமிழக தலைநகரின் வரலாற்றினைத் சென்ற பயணத்தின் முதல் வீடியோ தொகுப்பு உங்களுக்காக இங்கே! மேலும் படிக்க : சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…
சென்னைப் பல்கலைக்கழகம் தேடல் குழு
சென்னைப் பல்கலைகழகத்திற்கு துணை வேந்தரை தேர்வு செய்வதற்கு தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக ஜெகதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் இவரை தற்போது தேடுதல் குழுவின் தலைவராக நியமித்துள்ளனர். ஜே.என்.யூ வளாகத்தில் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை கலவரத்தை சரியான முறையில் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தது குறிப்பிடத்தக்கது. இவரின் நியமனத்திற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
மின்கணக்கீட்டாளர் பணிக்கான தேர்வை தமிழிலேயே எழுத முதல்வரிடம் பேசி அனுமதி பெற்றுள்ளோம்
மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆங்கிலத்தில் தேர்வை அறிவித்திருந்தார்கள்
தமிழகத்தின் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சிகளுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம்
– அமைச்சர் தங்கமணி
டெல்லி கலவரம் தொடர்பாக விதிமுறைகளை மீறி செய்தி ஒளிப்பரப்பியதாக ஏசியா நெட், மீடியா ஒன் ஆகிய 2 மலையாள சேனல்களுக்கு 48 மணிநேர தடை.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் நடவடிக்கை.
“பள்ளிக் கல்வித்துறையை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு உதவ வேண்டும்!”
டெல்லியில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை!
கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவிற்காக தமிழகத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறப்பட்டுள்ளனர்.
வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அன்பழகனின் உடல் ஒத்துழைக்கவில்லை. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் – திமுக தலைவர் ஸ்டாலின்.
கம்பம் அருகேயுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ரஞ்சித். இவர் இன்று மாலை கம்பம் உத்தமபாளையம் சாலையில் காக்கில் சிக்கையன்பட்டி அருகில் நடுரோட்டில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
“திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைக்கு பலன் அளிக்காமல் அவரது உடல்நிலை இருந்து வருகிறது” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அண்ணாத்த படத்தில் முன்னணி தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா , கீர்த்தி சுரேஷ் , குஷ்பு , மீனா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயம் படத்தில் நடித்த கோபிசந்தை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கோபிசந்த் 18 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார்.
சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கான ஆய்வுக் குழுவுக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் துணைவேந்தரை, அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கல்வியாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஆளுநரின் இந்த முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வருங்கால வைப்பு நிதிக்கு குறைந்தது 10 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது குறைந்தபட்ச வசதிகளுடன் வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
யெஸ் பேங்கிலிருந்து பணம் எடுக்க நேற்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பு திருமலா கோயில் நிர்வாகம் ரூ1300 கோடியை எடுத்துள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெண்மையை கொண்டாடும் விதமாக வீட்டுவேலை செய்யும் பெண்களுடன் சென்று ‘திரெளபதி’ படத்தை கண்டு ரசித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா எட்டாம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். கடந்த மாதம் 28 ஆம் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் குமரவிடங்க பெருமானும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். இந்நிலையில் எட்டாம் நாளில் சுவாமி பெரிய வெள்ளி சப்பரத்தில் தையல் நாயகி வகையறா மண்டபத்திலிருந்து எழுந்தருளி எட்டு திரு வீதிகளிலும் உலா வந்தார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு
* “புதிய மாவட்டங்களில் தொகுதி மற்றும் வார்டு மறுவரை பணிகளை மேற்கொள்ள 8 வார அவகாசம் தேவை”
* தேர்தல் ஆணையத்தின் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல்
திருவள்ளூர் : காக்களூர் அருகே உள்ள ஜே.ஆர் தொழிற்சாலையில், கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு
தமிழகம் முழுவதும் மார்க்கெட்டில் விற்கக்கூடிய மீன்களில் பார்மலின் என்கிற ரசாயனம் கலந்து விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, கடலூர் மஞ்சகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகர் மீன் மார்க்கெட் வெளிப்புறத்தில் சுமார் 100 கிலோ அழுகிய மீன்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, இதுபோன்ற மீன்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனையாளர்களை அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.
1,500 பேர் வரை தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என இந்திய ராணுவம் தகவல். சென்னை, கொல்கத்தா, செகந்திரபாத், ஜெய்சால்மர் ஆகிய இடங்கள் தனிமைப்படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டதுடன் கருத்துக்களையும் கேட்டறிந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அமைப்பு ரீதியாக வலுவான கட்டமைப்பை உருவாக்கிய பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கலாம் என ரஜினி அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாக தெரிகிறது. வரும் நான்கு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. பிரதான கட்சிகளே கூட்டணி அமைத்து செயல்படும் நிலையில், நாமும் கூட்டணி அமைத்தால் தான் சரிவரும் என ரஜினி கூறியதாகவும், கமல் உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாவட்ட செயலாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலா விடுதலையானால் அரசியலில் பெரிய மாற்றம் வரும்; சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம்
– சுப்ரமணியன் சுவாமி
குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு. தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு மற்றும் கருணை மனு அளிக்க அனுமதிக்க மனுவில் கோரிக்கை . சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்
மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிப்பதாகவும், கண்டனத்திற்குரிய இந்தச் செயலில் ஈடுபட்டோர் – துணை நின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
சட்டப்பேரவை கூட்டத்தின் போது வன்முறை, அசம்பாவிதம் ஏற்படாதவண்ணம் காவல்துறையினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தேனியில் புதிதாக உருவாக உள்ள அரசு சட்டக்கல்லூரிக்கு கட்டிடம் மற்றும் விடுதிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வு காணொலி காட்சிகள் மூலம் நடைபெற்றது.
கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க உள்ளார் முதல்வர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 லட்சம் நிதி உதவி வழங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
யெஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் செய்திருக்கும் டெபாசிட்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வங்கி மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் அவர் பேசியுள்ளார்.
பிரதமர் மோடியின் கொள்கை தான் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது என்று யெஸ் வங்கி விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில அரசே முடிவு செய்யலாம் என்று மக்களவையில் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்.
சென்னை தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டினை வீசிய மூன்று பேர், சதீஷ், ஹரிஷ், மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தென்காசி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
நிதி நெருக்கடியால் அவதியுற்று வரும் யெஸ் வங்கியின் பங்குகள் குறைந்து கொண்டே வருகிறது. அதன் மதிப்புகள் தற்போது 60%மாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி முக ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மனு மீதான விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
டெல்லி வன்முறை தொடர்பாக பேச முற்பட்ட 7 காங்கிரஸ் எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. பாராளுமன்றம் இந்திய ஜனநாயகத்தின் கோவில் என்று அடிக்கடி கூறப்படுவது உண்டு. அதனை பா.ஜ.க. அரசு அதனை மீண்டும் உறுதி செய்ய வேண்டிய தருணம் இது என்று ட்வீட்
ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகல் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தர்மபுரி அருகே நகைகளை விற்க முயன்றவர்களை தனிப்படை சுற்றி வளைத்து பிடித்தது. மகாராஷ்ட்ராவை சேர்ந்த 5 பேர் தப்பியோட்டம்.
மதுரை உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை சடலமாக மீட்பு. ஒரு மாத பெண் குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொல்லப்பட்டதாக தகவல்.
சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் உத்தரவினை தடை செய்து அறிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மாயமான பள்ளி மாணவிகள் நான்கு பேரை காவல்துறையினர் காட்பாடி ரயில் நிலையத்தில் கண்டுபிடித்துள்ளனர். வெளியூர் செல்லும் முனைப்பில் வீட்டில் இருந்து வெளியேறிய நான்கு நபர்களையும் காவல்துறையினர் பத்திரமாக பெற்றோர்களிடத்தில் ஒப்படைத்தனர்.
திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தேரோட்டம் வருகின்ற 8ம் தேதி நடைபெற உள்ளது.
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 872 உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ. 109 உயர்ந்ததால் இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 4231 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் விலை ரூ. 33, 848 ஆகும்.
தமிழக காவல்துறைக்கு ரூ. 95.58 கோடி மதிப்பில் 2,271 வாகனங்களை முதல் அமைச்சர் வழங்கினார். இதன் விழாவை கொடியசைத்து துவங்கி வைத்தார் முதல்வர். இந்த நிகழ்வில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.
கச்சதீவில் உள்ள தேவாலயத்தில் இன்று நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். உளவுப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் தீவிர சோதனைக்கு பிறகு பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நோய் தொற்றுகளை கண்டறியும், அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரே மையம் மகாராஷ்ட்ராவில் தான் இருக்கிறது. இந்த எண்ணிக்கை போதாது. இது போன்று பல்வேறு இடங்களில் ஆராய்ச்சி மையங்கள் துவங்க வேண்டுமென்று கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.