Snake Serials in Tamil : ஃபேண்டஸி படங்களைப் போல ஃபேண்டஸி சீரியல்களுக்கும் தமிழகத்தில் பஞ்சம் இல்லை. அப்போதைய சக்தி மான் தொடங்கி பல நூறு ஃபேண்டஸி சீரியல்கள் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. இவ்வளவு ஏன் நம்மில் பலருக்கும் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் எளிதில் புரிய வைத்தது தொலைக்காட்சி தொடர்கள்.
ஆன்மிகத்தை எடுத்துக் கொண்டால், ‘சூலம்’, ‘வேலன்’, ‘ராஜ ராஜேஸ்வரி’ என பக்தியையும் சீரியல்கள் அதிகப்படுத்தின. அதன் பிறகு இது போன்ற ஃபேண்டஸி சீரியல்களில் பாம்பு முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. குறிப்பாக சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘நாகினி’ சீரியல் ரசிகர்களிடம், பெரும் வரவேற்பைப் பெற்றது. கலர்ஸ் தொலைக்காட்சியில் இந்தியில் எடுக்கப்பட்ட அந்த சீரியல் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டது. இந்தி ரசிகர்களுக்கு ஏற்றபடி, கதையின் போக்கு, நடிகர், நடிகைகளின் உடை அலங்காரம் என அனைத்தும் இருந்தது. இப்படியான ஒன்றை தமிழில் பார்த்த ரசிகர்களுக்கு தலை கால் புரியவில்லை. முக்கியமாக நாகினி பாம்பாக நடித்த மெளனி ராய், பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார்.
அதனைத் தொடர்ந்து ‘நந்தினி’ சீரியலையும் ஒளிபரப்பியது சன் டிவி. இதனை அவ்னி டெலி மீடியா சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரித்தார். அவரின் கதையை ராஜ் கபூர் சீரியலாக இயக்கினார். இதிலும் பாம்பு தான் மெயின் கேரக்டர். பாம்பாக நித்யா ராம் நடித்திருந்தார். தமிழில் நேரடியாக இயக்கப்பட்ட இந்த சீரியலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சரி, இப்போது இருக்கும் பாம்பு சீரியல்களைப் பற்றி பார்ப்போம்.
Advertisment
Advertisements
நாகினி சீசன் 4
நாகினியின் முதல் பாகத்தை மொழிப்பெயர்ப்பு செய்து சன் டிவி ஒளிபரப்பிய நிலையில், இரண்டாம் பாகம் முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வருகிறது. சமீபத்தில் தான் இதன் 4-ம் சீசனின் ஒளிபரப்பு துவங்கியது. இதில் ஷிவன்யா, ஸ்ரேயா என்ற கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு, அதுவும் பாம்பு இவ்வளவு அழகாக இருந்தால் யாருக்குத் தான் பயம் வரும் என்ற ரேஞ்சில் இவர்களுக்கான வரவேற்பு இருந்தது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஆரம்பத்தில் நார்மல் குடும்பக் கதையாகத் தான் இருந்தது. அதன் பின்னர் பாம்பும் முக்கிய பங்கை வகித்து வருகிறது. கணவனை நடக்க வைக்க, பல்வேறு பூஜைகளை மேற்கொள்கிறாள் ஜானு. அப்போது வாசுகி பாம்பின் ஆசிர்வாதம் இருந்தால் தான் இது முடியும் என்றார் அந்த சாமியார். அதிலிருந்து அரண்மனைக்கிளி சீரியலில் முக்கியத்துவம் பெற்று வருகிறது இந்த பாம்பு.