Tamil TV News: வி.ஜே தியா மேனன் சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறார். கோயம்புத்தூர் பெண் தியா, +2 படிக்கும்போதே உள்ளூர் டிவி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். படிக்கும்போதே டிவி ஆங்கராக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். படிப்புக்கு தடை வராது என்றால் ஆங்கரிங் பண்ணலாம் என்று வீட்டில் கிரீன் சிக்னல் கிடைக்க, அன்று ஆரம்பித்த பயணம் இன்று சன் டிவி வரை தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.
20 நொடிகள் சோப்பினால் கைகளை கழுவ வேண்டும்… பாடத்தினை முறையாக கற்ற குரங்கு!
முதலில் சன் மியூசிக் சானலில் தொகுப்பாளினியாக நுழைந்து பின்னர் சன் டிவியிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பித்தார் தியா. செலிபிரிட்டி நேர்காணல், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் இவரது பங்கு இருக்கிறது. சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார் தியா. திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. கடந்த சில வருடங்களாக திருமணத்தில் சும்மா போட்டோ எடுத்து ஆல்பம் செய்வது என்பதையும் தாண்டி, ஒரு கான்செப்ட் வைத்து போட்டோ ஷூட் எடுப்பது, வீடியோ செய்வது என்பது நடைமுறையாக இருக்கிறது. அப்படித்தான் ஒரு பிரமாதமான கான்செப்ட் வைத்து தியாவின் கல்யாணம் நடந்ததாம்.
அந்த திருமண போட்டோ ஷூட் மற்றும் வீடியோவில் தியா வித விதமான போஸ்கள் கொடுத்து இருப்பார். அதோடு, இவரது திருமண வீடியோவும் கூட வேற லெவலில் இருந்தது. இவரின் திருமண வீடியோ பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்டது. இதை ஒரு கான்செப்ட்டாக வைத்து சன் லைஃப் சானலில் விதம் விதமான திருமண நிகழ்வுகளை ஒரு நிகழ்ச்சியாகவே ஒளிபரப்பு செய்து வந்தார்கள். தொகுத்து வழங்கியவர் தியா தான். பிறகு அதே நிகழ்ச்சியை, சன் டிவியின் வணக்கம் தமிழாவில் தினமும் 15 நிமிடங்கள் ஒளிபரப்பி வந்தார்கள். இப்படி பலரும் பாராட்டும்படி ஒரு நிகழ்ச்சியாகவே தொகுத்து வழங்கும்படி இருந்தது தியாவின் கல்யாணம் வீடியோ, போட்டோஸ்.
தியாவின் தங்கை தீப்தி, சன் டிவியின் நிலா சீரியலில் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்போது நிலா சீரியல் ஆரம்பத்தில் இருந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால், இந்த எபிசோட்களில் தீப்தி இருக்க மாட்டார். ஒரு வருடத்துக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலா சீரியலில் கடந்த 4 மாத எபிசோட்களில்தான் தீப்தி நடித்து வந்தார். தங்கை தீப்தியுடன் தியா, தமிழ் வருடப்பிறப்பில் டிவிட்டரில் பகிர்ந்து இருக்கும் இந்த படத்தைப் பாருங்கள்.
”நிருபர், செய்தி வாசிப்பாளர், சீரியல் ஹீரோயின்…” – சரண்யா சீக்ரெட்ஸ்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”