”நிருபர், செய்தி வாசிப்பாளர், சீரியல் ஹீரோயின்…” – சரண்யா சீக்ரெட்ஸ்!

2012 லண்டன் ஒலிம்பிக் விளையாட்டை தொகுத்து வழங்கிய, ஒரே தென்னிந்திய செய்தியாளர் என்ற பெருமையும் சரண்யாவையே சேரும்.

By: Updated: April 17, 2020, 03:49:26 PM

Sharanya Turadi : சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவர் சரண்யா. இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். சென்னையில் பிறந்து வளர்ந்த சரண்யா, பள்ளி படிப்பையும் அங்கேயே முடித்தார். எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை படிப்பையும், MOP வைஷ்ணவா கல்லூரியில் முதுகலையும் படித்தார்.

Serial Artist Sharanya Thuradi சரண்யா

நிவாரண உதவிகளை வழங்க தடையை எதிர்த்து வழக்கு – வைகோ நேரில் ஆஜர்

ஆரம்பத்தில் நடிகை சரண்யா நிருபராக தனது கரியரை தொடங்கினார். கலைஞர் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். பின்னர் புதிய தலைமுறை, நியூஸ் 18 ஆகிய தொலைக்காட்சிகளிலும் தனது பணியை தொடர்ந்தார். 2012 லண்டன் ஒலிம்பிக் விளையாட்டை தொகுத்து வழங்கிய, ஒரே தென்னிந்திய செய்தியாளர் என்ற பெருமையும் சரண்யாவையே சேரும். புதிய தலைமுறையில் வேலையை விட்டு விட்டு, லண்டனுக்கு குடிபெயர்ந்தார். அங்கு சில மாதங்கள் இருந்து விட்டு, படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன் திரும்பி வந்து, நியூஸ் 18 தமிழ் சேனலில் தலைமை செய்தி நிருபராக சேர்ந்தார். அதோடு ’ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’ என்ற படத்திலும் நடித்து உள்ளார்.

Serial Artist Sharanya Thuradi வெள்ளை உடையில் ரோஜா இதழ்கள் – படத்தில் சரண்யா

சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே ஒரு சில படங்களில் நடித்திருந்தார் சரண்யா. பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் டிவி-யை நோக்கி பயணம் செய்தார். சன் டி.வி-யில் மகாபாரதம் சீரியலில் பாலி கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறைப்பதில்லை சீரியலில் முதன் முதலாக ஹீரோயினாக நடித்திருந்தார்.

Serial Artist Sharanya Thuradi தண்ணீரில் விளையாட யாருக்குத் தான் பிடிக்காது

அந்த சீரியல் ரசிகர்களிடம் சரண்யாவுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து தெலுங்கு சீரியல் ஒன்றிலும் அவர் நடித்தார். அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரன்’ சீரியலில் நாயகியாக நடித்தார். விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியலை இயக்குநர் செல்வா இயக்கி வருகிறார். பின்னர் திடீரென ‘ரன்’ சீரியலில் இருந்து விலகி, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ’ஆயுத எழுத்து’ சீரியலில் நடித்து வருகிறார்.

Serial Artist Sharanya Thuradi கடற்கரையில் சரண்யா

36 மணி நேரமாகியும் ஓய்விடம் கிடைக்காத, மேகாலய மருத்துவரின் உடல்

கல்லூரியில் படிக்கும் போதே, ராகுல் சுதர்சன் என்பவரை காதலித்த சரண்யா, அவரை 2015-ம் ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டார். ராகுல் லண்டனில் வசித்து வருகிறார். சீரியல் படபிடிப்பில் பிரேக் கிடைக்கும் போது, லண்டன் சென்று, கணவருடன் பொழுதைக் கழித்து வருகிறார் சரண்யா. அதோடு பெயிண்டிங், ட்ராவலிங் ஆகியவற்றிலும் இவருக்கு விருப்பம் அதிகமாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Vijay tv ayudha ezhuthu serial sharanya turadi sundaraj

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X