36 மணி நேரமாகியும் ஓய்விடம் கிடைக்காத, மேகாலய மருத்துவரின் உடல்

”கடவுளின் மிகப் பெரிய படைப்பு, நமது அசிங்கமான பக்கத்தைக் காட்டுகிறது.”

Meghalaya doctor death, Buried after 36 hours
Meghalaya doctor death, Buried after 36 hours

தோரா அகர்வாலா, அபிஷேக் சஹா

மேகாலயாவின் முதல் COVID-19 நோயாளியும், 69 வயதான மருத்துவர் மற்றும் அந்த மாநிலத்தின் முதல் பெரிய தனியார் மருத்துவமனைகளில் ஒன்றின் நிறுவனரும் இறந்து, கிட்டத்தட்ட 36 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு தேவாலய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

கொரோனா இல்லாத முதல் மாநிலம் கோவா… 7 நபர்களில் 6 பேர் முற்றிலும் குணம்!

“கருணை என்பது காலத்தின் தேவை, எங்கள் நன்றி ரியாட்சம்தியா பிரஸ்பைடிரியன் தேவாலயத்திற்கு உரித்தாகட்டும். அவரது ஆன்மா அமைதியாக இளைப்பாறட்டும் ” என்று மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ட்வீட் செய்துள்ளார்.

நோயாளியின் மரணத்திற்குப் பிறகு வெளிவந்த நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் விதமாக சங்மாவின் செய்தி இருந்தது. மருத்துவரை அடக்கம் செய்வதற்கான இடத்தை நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.

குடும்பத்தினர் அவர்களின் வீடு அமைந்திருக்கும், நோங்போவில் அடக்கம் செய்ய விரும்பினர். ஆனால் அங்கு குடியிருப்பவர்களும், சமூகத் தலைவர்களும் கொரோனா வைரஸைக் காரணம் காட்டி அடக்கம் செய்ய மறுத்துவிட்டனர். பின்னர், உடலை தகனம் செய்ய விவாதங்கள் தொடங்கியபோது, ஷில்லாங்கின் ஜலுபாராவில் உள்ள மயானத்தின் அருகில் வசிப்பவர்கள் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அவரை ரி போய் மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த நிலத்தில் புதைக்க விரும்பினர். ஆனால் அதிலும் சில சிக்கல்கள் இருந்தன. பின்னர் மருத்துவரின் உடலை தகனம் செய்ய அவர்கள் விரும்பினர். ஆனால் பொதுமக்கள் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்” என்று கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தின் டி.சி. தெரிவித்தார்.

இதற்கிடையே, மருத்துவரின் உடல் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நிறுவிய மருத்துவமனையில் இருந்தது.

இறுதியாக, புதன்கிழமை இரவு, அரசாங்கம் தேவாலயத்தை சென்றடைந்தது. “அவர்கள் ரெஸ்பான்ஸ் செய்தனர். அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆணையரும் செயலாளருமான சம்பத் குமார் கூறினார். இறுதிச் சடங்கில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். “ஆனால் அவர்கள் அவருடைய நேரடி குடும்பம் அல்ல. ஏனெனில் மருத்துவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் பலருக்கு இப்போது கொரோனா பாஸிட்டிவ் உள்ளது” என்று நோங்பிரி துணை ஆணையர் கூறினார்.

திங்கட் கிழமை இரவு வரை, மேகாலயாவில் ஒரு பாஸிட்டிவ் கேஸும் இல்லை. ஆனால் புதன்கிழமைக்குள், எட்டு கேஸ்கள் பதிவாகின. அனைத்தும் மருத்துவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உதவியாளர்கள் என அரசு அறிவித்தது. மருத்துவரின் மருமகன், ஒரு விமானி. கடந்த மாத இறுதியில் நியூயார்க் மற்றும் டெல்லிக்கு சென்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் மார்ச் 24 அன்று ஷில்லாங்கிற்கு திரும்பியிருந்தார்.  ஆனால் மருத்துவர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இறந்த மருத்துவர்களின் இரண்டு மகள்கள் டாக்டர்களாக உள்ளனர். அதே நேரத்தில் மகன்கள் மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நிர்வகிக்கிறார்கள். இது 1991-ல் ஒரு கிளினிக்காக தொடங்கப்பட்டது. இன்று, இந்த மருத்துவமனையில் இரண்டு கிளைகள் உள்ளன. ஷில்லாங் மற்றும் நோங்போ என இரு இடங்களில் அவைகள் அமைந்துள்ளன. “இது ஒரு நல்ல மருத்துவர்களைக் கொண்ட  மருத்துவமனை” என்று மூத்த பத்திரிகையாளரும் தி ஷில்லாங் டைம்ஸின், ஆசிரியருமான பாட்ரிசியா முகிம் கூறினார்.

”இந்த மருத்துவமனை, உண்மையில், நலிந்த பிரிவினருக்கு சேவை செய்வதற்கான ‘உறுதிமொழியை’ பின்பற்றுகிறது, மேலும் ஏழைகளுக்கு இலவச மற்றும் தள்ளுபடி சேவைகளை வழங்குகிறது.

அவர் தனது சமூகப் பணிகளுக்காகவும், ஏழைகளுக்கான கட்டணங்களைத் தள்ளுபடி செய்வதற்காகவும் அறியப்பட்டார். அவரை வேறு பல மருத்துவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தியது என்னவென்றால், அவர் எப்போதும் புன்னகையும், மென்மையான நடத்தையும் கொண்டிருந்தார்,” என்று முகிம் கூறினார்.

ஆயினும், செவ்வாயன்று மருத்துவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என தெரிய வந்ததும், அவரது குடும்பத்தினர் உள்ளூர் சமூக ஊடக குழுக்களால் குறி வைக்காப்பட்டனர்.

”என் மாமனார் இறந்து 12 மணி நேரம் ஆகிவிட்டது. என் மனைவி தந்தையை இழந்தாள். அவரது தகனம் முடிந்ததா என்பது எங்களுக்குத் தெரியாது. அவரது உடலின் அருகே நின்று அழுவதற்கு நாங்கள் அங்கு இல்லை. இந்த செய்தி பகிரங்கப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 48 மணிநேரங்கள் ஆகிவிட்டன, ஊடகங்களும், சமூக ஊடகங்களும் எங்களை இழிவுபடுத்துகின்றன. மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் உள்ள எனது குடும்பத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இதிலிருந்து எங்களை யாரும் காப்பாற்றவில்லை” என்று மருத்துவரின் மருமகன் வாட்ஸாப்பில் எழுதினார்.

“கொரோனா வைரஸ் ஒரு சிறிய வைரஸ். பார்க்க முடியாத, நீண்ட வாழ்க்கையில்லாதது, ஆனால் புத்திசாலி. இது நம்மை மனிதர்களாக ஆக்கியுள்ளது. கடவுளின் மிகப் பெரிய படைப்பு, நமது அசிங்கமான பக்கத்தைக் காட்டுகிறது. என் மாமனார் தனது நோயாளிகளின் சிகிச்சையில் தனது வாழ்க்கையை கழித்தார். அவரது நினைவை மதிக்க இது சரியான அணுகுமுறையல்ல” என்றும் குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இது மாநிலத்தில் முதல் கொரோனா வைரஸ் மரணம் என்பதால், “ஒருவித பீதி” ஏற்பட்டது. “ஆனால் கடைசி சடங்குகளுக்கு அரசாங்கம் வழங்கிய நெறிமுறை, மிகவும் விரிவானது. பயப்பட ஒன்றுமில்லை” என்று அந்த அதிகாரி கூறினார்.

மேகாலயா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை, மாநில அதிகாரிகள் இந்த விஷயத்தை கையாண்ட விதம் “தகுதியற்றது” என்றும், உள்ளாட்சி அமைப்புகளின் நடத்தை “ஒவ்வொரு சரியான சிந்தனையாளரின் மனசாட்சியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது” என்றும் கூறியது.

உலக சுகாதார அமைப்பு (WHO) வழங்கிய “இறந்த உடல் மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்று நீதிமன்றம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. “இறந்த உடல் மேலாண்மை, தகனம் மற்றும் அடக்கம் ஆகியவை எந்தவொரு வகையிலும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும்” என்று நீதிமன்றம் மேலும் கூறியுள்ளது.

”நீங்கள் தான் உதாரணம்” – நெல்லை துணை ஆணையர் அர்ஜூன் சரவணனை பாராட்டிய முதல்வர்!

மருத்துவரின் குடும்ப உறுப்பினர்கள் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஒரு நெருங்கிய உறவினர் அவர்களின் மனநிலையை சுருக்கமாகக் கூறினார். “இதைப் பற்றி சோகமாகவும் வருத்தமாகவும் இருப்பவர்கள் இருக்கிறார்கள். வெறுக்கத்தக்கவர்களும் இருக்கிறார்கள். நாம் சோகமாக உணரத் தேவையில்லை. அவர் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார். கடவுள் விரும்பிய வழியில் இது நடந்திருக்கிறது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

 

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Meghalaya doctor death covid 19 coronavirus buried after 36 hours

Next Story
கொரோனா இல்லாத முதல் மாநிலம் கோவா… 7 நபர்களில் 6 பேர் முற்றிலும் குணம்!Coronavirus Goa will be declared green zone soon
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com