காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு ஏற்றார் போல் நெல்லை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் இருப்பதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார்.
தைரிய லட்சுமி காயத்ரி, செல்ஃபி புள்ள ஹன்சிகா: படத் தொகுப்பு!
சென்னையிலிருந்து, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக கடந்த ஆண்டு பணியிட மாறுதலானவர் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜுன் சரவணன். மக்களிடம் காட்டும் அன்பான அணுகுமுறையாலும், எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பேசும் பேச்சினாலும், கொடுக்கும் புகார்கள் மீதான உடனடி நடவடிக்கையாலும் நெல்லை மக்களின் மனங்கவர்ந்த அதிகாரியாக மாறியிருக்கிறார்.
காவல்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் தாண்டி பொதுமக்களின் பல்வேறு நலன் சார்ந்த, சமூக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். அனைத்து விஷயங்களையும், தனது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துக் கொள்கிறார். நேரடியாக மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் மூலமாக உதவி கேட்பவர்களுக்கும், உடனடியாக செய்து தருகிறார்.
இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் பிச்சைராஜா என்பவர் துணை ஆணையர் அர்ஜுன் சரவணனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, "நான் வெளிநாட்டில் இருக்கிறேன். எனது பெற்றோர்கள் வயதானவர்கள். தச்சநல்லூர் விக்னேஷ் நகரில் வசிக்கிறார்கள். ஏதேனும் எமர்ஜென்சி என்றால் எந்த நம்பரைத் தொடர்பு கொள்ள வேண்டும்" என்று கேட்டிருந்தார்.
இதையடுத்து, அவருடைய குடும்பத்தினரைச் சந்தித்து மாஸ்க், சானிடைசர்கள் ஆகியவற்றைக் காவல்துறையினர் வழங்கியுள்ளனர். அந்தப் புகைப்படத்தை அர்ஜுன் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிச்சை ராஜா ட்வீட்டைக் குறிப்பிட்டு, "நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்பட வேண்டாம் ப்ரோ" என்று கூறியிருந்தார்.
இதைப் பார்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ”காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக, தங்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் சிறப்பானதாக உள்ளது. சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, மக்களுக்காக ஓடோடி உதவும் தங்களின் பணி சிறக்கவும், சேவை தொடரவும் எனது வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்!” என்று தெரிவித்திருந்தார்.
Corona Updates Live : நாட்டின் பொருளாதார நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்
அதற்கு பதிலளித்த அர்ஜூன் சரவணன், “மிக்க நன்றி ஜயா. திருநெல்வேலி மாநகர காவல்துறையின் சார்பாக தொடர்ந்து சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு, திருநெல்வேலி மாநகர ஆணையர் தீபக் தாமோதர் IPS, நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் IAS, துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS, மற்றும் திருநெல்வேலி மாநகர காவலர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”