Coronavirus Goa will be declared green zone soon : இந்தியாவில் அதிகப்படியான வெளிநாட்டினர் வந்து செல்லும் இடங்களில் ஒன்று தான் கோவா. இதன் கடற்கரை அழகினை ரசிக்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் படையெடுத்து வருவது வழக்கம். ஆனால் அங்கு கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாகவே உள்ளது.
மொத்தமாகவே இங்கு 7 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் 6 நபர்கள் ஏற்கனவே உடல் நலம் பெற்று தங்களின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். மீதம் இருக்கும் ஒருவரும் வீடு திரும்பினால் பச்சை மண்டலமாக (Green Zone) கோவா அறிவிக்கப்பட்டுவிடும். இன்று அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
Advertisement
இரண்டு மாவட்டங்களை கொண்ட கோவாவில் ஏற்கனவே தெற்கு கோவா, க்ரீன் ஸோனில் இருப்பதாக அம்மாநில முதல்வர் ப்ரோமோத் ஸாவந்தும், மத்திய உள்துறை அமைச்சகமும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று முதல் கோவா க்ரீன் ஸோன் ஸ்டேட்டஸை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் கொரோனா இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட உள்ளது. ஏப்ரல் நான்காம் தேதிக்கு மேல் கோவாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.