Advertisment
Presenting Partner
Desktop GIF

கொரோனா லாக்டவுன்: டிடி-யைப் பின்பற்றும் தனியார் தொலைக்காட்சிகள்?

சமூக தனித்திருத்தலை கடைப்பிடிக்கும் ஒரு பொறுப்புள்ள குடிமகளாக, எனது குழு பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chithi 2 serial, radhika sarathkumar, coronavirus lockdown, serial re telecast, sun tv

chithi serial part 2, chithi serial cast, sun tv serial, சித்தி 2 சீரியல், சன் டிவி சீரியல், ராதிகா சரத்குமார்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து படபிடிப்புகளையும் நிறுத்துவதாக, ‘FEFSI‘ அறிவித்தது. இதனால் சன் டிவியின் சீரியல் தயாரிப்பாளர்கள் புதிய யுக்திகளை கையாண்டனர். "எங்களில் சில முக்கிய கலைஞர்கள், அவரவர் பகுதிகளை வாட்ஸ் ஆப்பில் டப்பிங் செய்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்புகிறார்கள். இதன் விளைவாக, ‘சித்தி 2’ க்கான ஃப்ரெஷ் கண்டெண்ட், ஏப்ரல் முதல் வாரம் வரை நீடிக்கும்,” என்று ஒரு சீரியல் நட்சத்திரம் தெரிவித்தார்.

Advertisment

Corona Updates Live : கேரளாவில் 2வது நபர் பலி – அசாமில் தேயிலை தோட்ட பணிகள் நிறுத்தம்

பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் சுமார் 45,000 எபிசோட்களை இயக்கியிருக்கும் மூத்த இயக்குனர் சுந்தர் கே விஜயன், ”இப்போது முன்பு போல அல்ல. தற்போது கிடைத்திருக்கும் கண்டெண்ட், ஏப்ரல் 4 அல்லது 5-ம் தேதி வரை கைக்கொடுக்கும். அதன்பிறகு தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் கூட டி.டி.யைப் பின்பற்ற நேரிடும். இது ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை சின்னத்திரைகளுக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது” என்றார்.

”இந்த நிலைமை தொடர்ந்தால் நான் மனச்சோர்வடைவேன். தற்போது, எனது சீரியல்கள் தடங்கல்கள் இல்லாமல் ஒளிபரப்பப்படுகின்றன.  சில சேனல்கள் ஏற்கனவே ஒளிபரப்பான சீரியல்களை மீண்டும் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன. அவற்றையும் நான் பார்க்கத் தொடங்கியுள்ளேன்” என்று சீரியலின் தீவிர ரசிகை ஒருவர் கூறினார்.

அமெரிக்கா ‘ரிட்டன்’ இளைஞர் மூலமாக ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா

ராடான் மீடியா வொர்க்ஸ் இந்தியா லிமிடெட் தலைவர் ராதிகா சரத்குமார் தனது ‘சித்தி 2’ சீரியல் எபிசோடுகள் ஒரு வாரத்தில் முடிந்துவிடும் என்றும், அதனால் மீண்டும் பழைய எபிசோடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்றும் கூறுகிறார். "வைரஸ் இந்த அளவிற்கு நம் வாழ்க்கையை பாதிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சமூக தனித்திருத்தலை கடைப்பிடிக்கும் ஒரு பொறுப்புள்ள குடிமகளாக, எனது குழு பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எங்கள் தயாரிப்பு இல்லம் மிகப் பெரியது. எனவே இந்த நேரத்தில் அவர்களின் வாழ்வைப் பற்றி நான் கவலைப்படுகிறேன், மற்ற விஷயங்களுக்காக காத்திருக்கிறேன்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vijay Tv Sun Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment