Tamil TV News: சன் டிவியின் டி40 விழா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியை அப்போது ஒளிபரப்பிய சன் டிவி, இப்போது லாக்டவுன் நேரத்தில் மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், கவிஞர் வாலி ஆகியோர் கலந்துக்கொண்டு சுவையாக பேசி இருக்கிறார்கள். நேற்றைய தினம் எம்.எஸ்.வி-யின் பிறந்தநாளை முன்னிட்டு இதை நினைவு கூர்ந்துள்ளது சன் டிவி.
’பூஜா ஹெக்டேவுக்கு மேக்கப் மேனாக மாறிய அல்லு அர்ஜூன்’: புகைப்படத் தொகுப்பு
ஒருவர் வெற்றி பெறுவது என்பது தனி முயற்சி இல்லை. கூட்டு முயற்சி. பாடகர், கவிஞர், டெக்னீஷியன்ஸ் என எல்லோரின் கூட்டு முயற்சிதான். இயக்குநர் கேபி சார் அபூர்வ ராகங்கள் படத்தை எடுக்கும்போது, எந்த படத்திலும் இதுவரை வராத ராகத்தை ஒரு பாடலுக்கு போட வேண்டும் என்று கேட்டார். எனக்கு ஒரே குழப்பம். 10 நாட்களாக சரியான தூக்கம் கூட இல்லாமல் எப்படி ராகத்தை போடலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். எப்போதும் சுறு சுறுப்பா தமாஷா பேசிகிட்டு இருப்பேன். என் குரு பாலமுரளி கிருஷ்ணா என்ன விசு டல்லா இருக்கேன்னு கேட்டார். ஒண்ணுமில்லைன்னு சொன்னேன். இல்லை சொல்லுன்னு சொன்னார். ஒரு படத்தில் மியூசிக் டைரக்டரா வேலை பார்த்துகிட்டு இருக்கேன். அவர் அபூர்வ ராகங்கள்னு படத்துக்கு பேர் வச்சு இருக்கார். இதுவரை யாரும் போடாத ராகத்தில் பாடல் கேட்டு இருக்கார் என்று சொன்னேன்.
பெண் ஆர்வலர் மீது வழக்கு பதிவு: அரை நிர்வாண உடம்பில் பெற்ற பிள்ளைகளை வைத்து பெயிண்டிங் செய்து வீடியோ!
கப சின்ன னி என்று நான்கு ஸ்வரத்தில் ஒரு ராகம் போடுன்னு சொல்லிக் குடுத்தார். அந்த ராகத்துக்கு மகதின்னு பேர். என் குரு சொல்லி போட்ட மியூசிக் தான் அதிசய ராகம் பாடல். இன்னும் மாணவனாக இருந்தே கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதிசய ராகம், பாடலை அபூர்வ ராகம் டைரக்டர் உதாரணம் சொல்லி புரிய வச்சுக் கொண்டு வந்தார். இந்த புகழ் அவரை சாரும். அவர்கள் எல்லாரும் இல்லை என்றால் நான் இல்லை என்று கூறினார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”