Tamil TV Show: சன் டிவியில் 'பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள். நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தான் காணாத கனவு ரஜினி சாருடன் நடிப்பது, அது நிறைவேறியது என்று கூறினார். ரஜினி சார் எப்போதும் ஆண்டவன் கொடுத்தது, ஆண்டவன் அருள் என்று சொல்வார். ஆக்சுவலா அவர் அவ்வளவு வேலை பார்க்கிறார். அவர் செய்யும் வேலைகளை பார்த்து ஆண்டவனே ரசித்து கைத்தட்டுவான். அந்த அளவுக்கு அவர் வேலை பார்க்கிறார். ஒரு சமயத்தில் எனக்கே ஒரு மெத்தனம் வந்துரும். இவ்ளோ நடிப்பு இதுக்கு போதும், இதுக்கு மேல வேணாம்ன்னு நினைப்பேன்.
திருப்பதி செல்பவர்கள் ஜாக்கிரதை.. தெரியாமல் கூட இந்த தவறை செய்யாதீர்கள்!
ஆனால், ரஜினி சார் இவ்ளோ பெரிய நடிகனாகிய பிறகும், கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் டைரக்டர் சார், நான் இதை பண்ணவா, அதை பண்ணவா என்று கேட்டு கேட்டு நடிப்பார். எனக்கு இதெல்லாம் செட்டே ஆகாது.. சத்தியமா செட்டாகாது என்று கூறினார் விஜய் சேதுபதி. முதன் முதலில் கார்த்திக் சுப்பராஜை ஒரு ஷார்ட் ஃபிலிம் இயக்கும்போது பார்த்தேன். இவர் தான் டைரக்டர்னு சொன்னாங்க. பையன் எதோ ஸ்கூல் படிச்சுக்கிட்டு இருக்கான் போல. அப்பா பெரிய பணக்காரர்.. அதான் படம் இயக்க வந்துட்டார்னு நினைச்சேன். கார்த்திக் கொஞ்சம் கமுக்கமான ஆளு. எப்போதும் படத்தில் ஒரு சர்பிரைசை ஒளிச்சு வச்சுக்கிட்டே இருப்பாரு. இப்போ கதை முடியும். அப்போ கதை முடியும்னு நாம் நினைப்போம். ஆனால், படம் கடைசி பிரேம் வரைக்கும் அந்த சர்பிரைஸை நீடிக்க வச்சு கதை சொல்லிகிட்டே இருப்பாரு.
’பென்குயின்’ விமர்சனம்: ‘ராட்சசன்’ சாயலில் மற்றுமொரு படம்
நாம எல்லாரும் பார்த்து ரசித்த ரஜினி சார் படம்னு ஒண்ணு இருக்கும்ல.. அதே மாதிரி தான் செம கமர்ஷியலா, செம ஸ்டைலா, செமக் கியூட்டா, செம கலாயா, செம கெத்தா அப்படி ஒரு படம் தான் பேட்ட என்று கூறினார். வாழ்க்கையில் ஒரு நல்ல பாடம் கிடைச்சுது. ரஜினி சார் கூட நடித்ததில் மகிழ்ச்சி என்று கூறி முடித்தார் விஜய் சேதுபதி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”