Tamil TV News, Roja: சன் டிவியின் ரோஜா சீரியலில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டம் வீட்டில் நடக்குது. பூஜைக்குத் தேவையான கொழுக்கட்டை முறுக்கு, சுண்டல் எல்லாத்தையும் ரோஜாவும் அர்ஜுனும் சேர்ந்து செய்து வச்சுட்டாங்க. வீடெங்கும் அலங்கார தோரணங்கள் கட்டிக்கிட்டு இருக்காங்க. மகனும், மருமகளும் சேர்ந்து வேலை செய்யறதை பார்த்து, அர்ஜுன் அம்மா கல்பனா மெய் மறந்து பார்த்து நிக்கறாங்க. சுமதிக்கா… அர்ஜுன், ஒரு நாள் கூட இப்படி வேலை செய்ததில்லை. பார்க்கவே சந்தோஷமா இருக்கு சுமதிக்கா என்று வேலைக்கார அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்படும் வித்தியாச மாமியாரா இருக்காங்க கல்பனா.
எச் -1 பி மற்றும் இதர விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது: அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்
அப்போதுதான் தனது அறையின் கதவைத் திறந்துக்கொண்டு வந்த அன்னபூரணி அம்மா, மருமகளே என்ன நடக்குது, பூஜைக்குத் தேவையானதை செய்தாச்சான்னு கேட்கறாங்க. அத்தை அங்கே பாருங்க, அர்ஜுனும் ரோஜாவும் சேர்ந்து எல்லா ஏற்பாடும் செய்துட்டாங்க. இப்போ தோரணம் கட்டிக்கிட்டு இருக்காங்கன்னு காண்பிக்க. அந்த நேரம் பார்த்து, தலைவாசல் எட்டாமல், எக்கி எக்கி தோரணத்தை கட்டிக்கிட்டு இருக்கும் ரோஜாவை அப்படியே தூக்கிக்கொண்டு, இப்போ கட்டு ரோஜா என்கிறான் அர்ஜுன். இதை பார்த்து கல்பனா, அன்னபூரணி அம்மா மகன் பிரதாப், வேலைக்கார அம்மா சுமதி மூவரும் வெட்கப்பட்டு நிற்கறாங்க.
ஆனால், இதை பார்த்து தர்ம சங்கடமான அன்ன பூரணி, ஆமா, இவன் ஒருத்தன். ஆன்னா ஊன்னா அந்த பொண்ணை தூக்கி வச்சுக்குவான். எப்போ பார்த்தாலும் பகல் ஷோ காண்பிச்சுகிட்டுன்னு தலையை குனிஞ்சுகறாங்க. மருமகளே என்ன பார்த்துகிட்டு நிக்கறயே. என்று கேட்க, என்ன அத்தை என்று கண்ணீரைத் துடைச்சுக்கறாங்க கல்பனா. என்ன அழறியா மருமகளே என்று கேட்க, இல்லை அத்தை இது ஆனந்த கண்ணீர் என்று சொல்றாங்க கல்பனா. சரியாய் போச்சு போ, என்று சொல்லிவிட்டு, தூக்கி வச்சுக்கிட்டே நிக்க வேணாம்.. வேலையை பார்க்க சொல்லுன்னு சொல்றாங்க.
ஆன்லைன் வகுப்புக்கு தடைகோரிய வழக்கு : சென்னை எழும்பூர் கண் மருத்துவமனைக்கு உத்தரவு
அர்ஜுன், ரோஜா.. எல்லாம் செய்து வச்சுட்டோம். இது எப்படி இருக்குன்னு டேஸ்ட் பார்க்க வேணாமா? இரு பார்க்கறேன் என்று முறுக்கை எடுத்து வாயில் வைக்க போறான். சார் சார்னு ரோஜா சொல்ல வருவதை, இந்த வளர்ந்த பய புள்ள காதில் வாங்கவே இல்லை. பொளேர்னு விடறா ஒரு அறை. அதிர்ச்சியான அரஜுன் என்ன ரோஜா என்னை அடிக்கற அளவுக்கு வந்துட்டியா என்று கேட்கிறான். இல்லை சார், சாமிக்கு படைச்சுட்டுத்தான் சாப்பிடணும்ன்னு சொல்றதுக்குள்ளே நீங்க சாப்பிடப் போனீங்க அதன் சார். சாரி சாரி என்று கேட்க, மருமகளே, அர்ஜுனை இந்த வீட்டில் யாருமே கை நீட்டி அடிச்சது இல்லை. இப்போ அவ அடிக்கறா பார்த்துகிட்டு நிக்கிறியான்னு கத்தறாங்க அன்ன பூரணி அம்மா. புருஷன் பொண்டாட்டி விஷயத்துல நாம எப்படி அத்தை தலையிட முடியும்னு கல்பனா கேட்க, நீ அப்படித்தான் பிரதாப்பை அடிச்சியான்னு கேட்கறாங்க. அம்மா அதை எப்படிம்மா என்று பிரதாப் வெட்கப்பட, அடப்பாவிங்களா என்று தலையில் கை வச்சுட்டாங்க.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”