Tamil TV News: 'ஒத்த செருப்பு' திரைப்படம் வெளியான நேரத்தில் சன் டிவியின் 'டக்குனு டக்குனு' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அந்த படத்தின் இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன். அப்போது, சினிமா வேண்டாம் என்று எப்போதாவது முடிவு எடுத்து இருக்கிறீர்களா என்று கேட்டபோது, நான் இல்லை.. என் ஆவி கூட அப்படி நினைக்காது என்று பதில் கூறினார். அதோடு, சில சமயம் என்னடா இப்படி நல்ல படம் எடுத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று சோர்வாக இருக்கும். அடுத்து எழும்போது விழுந்ததை விட இன்னும் பல மடங்கு வீரியத்துடன் எழுச்சி இருக்கும் என்று கூறினார்.
இயக்குநர் பாரதிராஜா ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் திடீர் மரணம்
சும்மாவே வெறும் ஆக்ஷன் படங்களை பார்க்க எனக்கு பிடிக்காது. தேவையே இல்லாமல் 50 பேரை போட்டு அடிப்பது, இப்படியான படங்கள் பார்க்க பிடிக்காது. ஆனால், சமீபத்தில் அசுரன் படம் பார்த்தேன். அதில் இப்படித்தான் 50 பேரை போட்டு அடிப்பது போல் இருக்கும். ஆனால், அதில் ஒரு சோஷியல் மெசேஜ் இருக்கும்.அசுரன் படம் பார்த்தேன். அதில் இப்படித்தான் 50 பேரை போட்டு அடிப்பது போல் இருக்கும். ஆனால், அதில் ஒரு சோஷியல் மெசேஜ் இருக்கும். இப்படி நல்ல மெசேஜ் இருப்பதனால், இது போன்ற படங்களை பார்க்க பிடிக்கும் என்று கூறினார். நான் நடிச்சு இருக்கலாம்னு நிறைய பேர் பார்த்து சொன்ன படம் விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி ரோல். கொஞ்ச வருஷத்துக்கு முன்பு வரை அப்படியான கேரக்டர் நான் நடிச்சுக்கிட்டு இருந்தேன். அதனால், அந்த கேரக்டர் நான் செய்து இருந்தால் நல்லா இருக்குமேன்னு எனக்கும் தோணுச்சு. ஆனா, என்னை விட சிறப்பாக விஜய் சேதுபதி நடிச்சு இருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா: அதிமுக.வினர் ஷாக்
கதை உயிர் போன்றது... உடல்னு சொல்றதோ.. டிரஸுன்னு சொல்றதோ திரைக்கதை. திரைப்படத்துக்கு கதை நன்றாக இருந்தால் கூட, அந்த உயிரை நன்றாக காண்பிக்கும் உடல், உடை இதுதான் முக்கியம். அதாவது திரைக்கதைதான் கதைக்கு வடிவம், அழகு கொடுப்பது என்று கூறினார் பார்த்திபன். மறைந்த ஒருவரை உயிரோடு கொண்டு வரணும்னா யார கொண்டு வருவீங்க என்று கேட்டபோது, கே.பி.சார் என்று சொன்னார். என்னோட ஒத்த செருப்பு படத்தை அவர் பார்த்திருந்தால், அவர் என்னை கூடையில் வைத்து தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஊரை சுற்றி இருப்பார். என் அப்பாவின் மறைவை கூட ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால், கே.பி.சார் இறப்பை ஏத்துக்க முடியலை. அதனால், அவரை உயிரோடு கொண்டு வர சொல்வேன் என்று பார்த்திபன் கூறினார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”