இயக்குநர் பாரதிராஜா ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் திடீர் மரணம்

சிகிச்சை பலன் அளிக்காததால், இன்று பிற்பகல் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

By: Updated: June 13, 2020, 04:44:30 PM

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.

படையப்பா நடிகை காரில் 104 மது பாட்டில்கள்: சென்னை போலீஸ் சோதனையில் சிக்கின

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ தொடங்கி ‘பொம்மலாட்டம்’ வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். பாரதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பரும் கூட. சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலன் அளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காததால், இன்று பிற்பகல் 2 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

இவர் இயக்குநர் பீம்சிங்கின் மகன், மூத்த எடிட்டரான லெனின் சகோதரர். ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’ என பாரதிராஜா இயக்கிய பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இந்த கண்ணன்.

அவரது தந்தை பீம்சிங் இயக்கிய ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்ற படத்துக்கும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது மனைவி பெயர் காஞ்சனா. மதுமதி, ஜனனி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

சிறந்த நடிகர் மட்டுமில்லை அருண் விஜய் மிகச் சிறந்த அப்பாவும் கூட நீங்களே பாருங்கள்!

கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நாளை (ஜூன் 14) இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Veteran cinematographer kannan paassed away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X