Sun TV Show: சன் டிவியில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'தலைவா' படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதை சன் டிவி மறு ஒளிபரப்பு செய்தது. நிகழ்ச்சியில் 'தலைவா' படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், நாயகி அமலா பால் இவர்களுடன் ஹீரோ விஜய் பங்கு பெற்றார். நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக தளபதியின் ரசிகைகள் பலரை கலந்துக்கொள்ள வைத்து இருந்தார்கள்.
”உடல் நலத்துல கலைஞரும், தளபதியும் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: மாரத்தான் புகழ் மா.சுப்பிரமணியன்
வந்திருந்த கல்லூரி பெண்கள் அனைவரும் விஜய்யை மரியாதையாக அண்ணா என்றே அழைத்தனர். நான் உங்க ஃபேன்.. உங்க டான்ஸ் பிடிக்கும், நடிப்பு பிடிக்கும். என்று பலரும் சொன்னார்கள். உங்க காமெடியை ரொம்ப ரசிப்பேன்.. எப்போது முழுவதுமாக ஒரு காமெடி படம் தரப்போகிறீர்கள் என்று ஒரு மாணவி கேட்டார். அப்போது பதில் அளித்த விஜய், மிக விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என்றும் கூறினார். இன்னொரு மாணவி, எல்லா ஹீரோயினுடனும் உங்க கெமிஸ்ட்ரி நல்லா இருக்கும். அதில் பாகுபாடு இருக்காது, அதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினார். தலைவா படத்தில் ரோப்பில் அமலா பால் வருவது எல்லாம் நான் ரொம்ப ரசித்தேன் என்று கூறினார். அமலா பாலுக்கு உண்மையாகவே அந்த காட்சி ஷூட் செய்யும்போது காலில் அடிப்பட்டது என்றாலும், சமாளித்து நடித்தார் என்று விஜய் கூறினார்.
5 முறை மிஸ்டர் மதுரை பட்டம்.. பலருக்கும் தெரியாத ரோபா ஷங்கரின் வெற்றிப்பயணம்!
அப்போது பேசிய ஒரு மாணவி, ஹாய் அண்ணா.. என்று கூப்பிட்டு, எனக்கு உங்க டான்ஸ், நடிப்பு, காமெடி எல்லாமே பிடிக்கும். எந்த நடிகரை பார்த்தும் எனக்கு கண்ணீர் வந்ததில்லை.. இப்போது உங்களை பார்த்து எனக்கு கண்ணீர் வருகிறது என்று சொன்னார். அந்த பெண்ணின் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்துக்கொண்டே இருந்தது. இதை பார்த்த விஜய் உடனே தனது கையை நீட்டினார். அந்த பெண் எழுந்து வர, இவர் எழுந்து நின்று கொண்டார். அடுத்து அந்த மாணவி கொஞ்சம் வேகமாக விஜய் நோக்கி வந்தார். உடனே விஜய்யும் நடக்க ஆரம்பித்து, வந்த மாணவியை அப்படியே அன்புடன் அணைத்துக் கொண்டார். மாணவியும் விஜய்யை கட்டி அணைத்துவிட்டு, தன் இடம் நோக்கி சென்றுவிட, கண்ணீருடன் செல்லும் மாணவியை வெகு நேரம் பார்த்துக்கொண்டே நின்றார் விஜய்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”