Tamil TV News: சன் டிவி-யின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் அவரது கணவரும், நடிகருமான கணேஷும் கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய ஆர்த்தியும், கணேஷும் பல நினைவுகளை பகிர்ந்துக்கொண்டனர். திருப்பதியில் தல அஜீதுடன் நடித்ததாக கூறிய ஆர்த்தி, நான் தல ரசிகை என்பதையும் தாண்டி தல தங்கச்சி என்று சொன்னார்.
மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
நம்ம ஒருத்தருக்கு அதிகமான மரியாதையை எப்போ குடுப்போம்னா கோயிலுக்கு போய் சாமி கும்பிடும்போது, நம்மையும் அறியாமல் அவருக்கும் சேர்த்து சாமிகிட்ட வேண்டிக்க தோணும். அப்படி ஒரு நபர் தான் தல. நான் தலைக்காக பிரே பண்ணுவேன். ஒரு டிவி இன்டர்வியூவில் தல பத்தி கேட்டாங்க.. அதாவது தல அப்படின்னா என்ன அர்த்தம் சொல்வீங்கன்னு கேட்டாங்க. தலன்னா மாஸ், கெத்து, டான் என்பதையும் தாண்டி தலன்னா தன்னம்பிக்கை, லட்சியம் என்று சொல்லிட்டு நான் வந்துட்டேன். அதுக்குப் பிறகு ஒரு 3 மாசம் கழிச்சு ஒரு விழாவில் தல மேடையில் உட்கார்ந்து இருந்தார். நான் கீழே இருந்து எல்லார்கிட்டேயும் பேசிகிட்டு இருந்தேன். தல கீழே வந்து, ரொம்ப தேங்க்ஸ் ஆர்த்தி. நீங்க சொன்னது தான் சரி. இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை, லட்சியம் ரொம்ப முக்கியம் என்று ஆமோத்தித்து பேசினார் என்று சொன்னார் ஆர்த்தி.
அழகு, டான்ஸ், ஃபைட்டு, யூத் இதெல்லாம் ஒரு ஹீரோவுக்கு இருக்கணும்... அப்படி ஒருத்தர் தான் நம்ம தளபதி விஜய். அழகு ஏறிகிட்டே போகுது... வயசு இறங்கிக் கிட்டே போகுதுங்க நம்ம தளபதிக்கு. எத்தனை வருஷமா ஹீரோவாகவே நடிச்சுக்கிட்டு, இன்னும் இளமையாகவே இருக்கார். டான்சில் ஒரு வெறித்தனம் இருக்கும். எத்தனை பேர் கூட ஆடினாலும், இவர் மட்டும் தான் அங்கு தெரிவார்.. மாஸ்டர் வந்து ஒரு கலக்கு கலக்க போவுது பாருங்க. வாத்தி கமிங் டான்ஸ் வேற லெவெலில் இருக்க போவுது. வாத்தி கம்மிங்.. ஒத்து கொரோனா என்று ஆகப்போவுது என்று சொன்னார் ஆர்த்தி. இப்படி ஆர்த்தி சொன்னது போட்டோ எடுத்து அது குறித்த நினைவுகளை பகிரும் செக்மென்ட். அதிலேதான் அஜீத் புகைப்படம் வந்தபோதும், அடுத்து விஜய் புகைப்படம் வந்த போதும் ஆர்த்தி மேற்கண்டவாறு கூறினார்.
’மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்’: மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு புகார்
கணேஷ் புகைப்படம் எடுக்கையில், அவருக்கு பவர்ஸ்டார் படம் வந்தது. அப்போது, ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன் இவர் உதவி கேட்டு வந்தா நிச்சயம் உதவி செய்வார். எத்தனையோ பேருக்கு உதவி செய்து இருக்கார் என்று சொன்னார். இடைமறித்த ஆரத்தி, எத்தனையோ பேருக்கு சாப்பாடு போட்டு இருக்கார். அந்த தர்மம் இவரை வாழ வைக்கும் என்று கூறினார்.ஆர்த்தியும் கணேஷும் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகம் ஆகி நடித்தவர்கள். பின்னர் தொடர்ந்து திரையுலகில் நடித்து வந்தாலும், கலைஞர் டிவியின் மானாட மயிலாட ஷோவில் டான்ஸ் ஆடியபோது காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். விஜய் டிவியின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டவர் ஆர்த்தி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”