vadivelu complaints against singamuthu and manobala
நடிப்பாலும், பாடி லாங்வேஜாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. சில வருடங்களாக அவர் படங்களில் நடிக்காத போதிலும், அவருடைய பாவனைகள் தான் இன்று மீம்ஸ்களாக இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. பலரின் சோகத்தை மறக்கச் செய்து, காயத்திற்கு மருந்தாக மாறியிருக்கிறார் வடிவேலு. இவருடன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் சிங்கமுத்து. பின்னர் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர்கள் சம்பந்தப்பட்ட நில மோசடி தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகர் மனோபாலா மற்றும் சிங்கமுத்து மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் வடிவேலு. அதில், 'நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும் நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த சில உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.
Advertisment
Advertisements
அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ் அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவுள்ளேன். ஏற்கனவே எனக்கும் சிங்கமுத்துவிற்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டிருப்பதை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆகையால் மனோபாலாவின் மீதும் சிங்கமுத்து மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண் 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள மனோபாலா, “எனது யூ-ட்யூப் சேனலில், சிங்கமுத்து பேசிய விஷயங்களை பல இடங்களில் பேசியுள்ளார். வடிவேலுவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பது, எனது நோக்கமல்ல. நடிகர் வடிவேலு மாதிரியான மகா கலைஞனின் நட்பை இழக்க நான் தயாராக இல்லை.
இதனை வடிவேலு புரிந்துக் கொள்வார் என நினைக்கிறேன். அவர் கோபம் தனிய காத்திருக்கிறேன். என்னை வடிவேலு நிச்சயம் புரிந்துக் கொள்வார் என நம்புகிறேன். நடிகர் சங்கம் வடிவேலு புகார் மீது நடவடிக்கை எடுக்க முன்வந்தால், என் தரப்பு விளக்கத்தையும் அளிக்க தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறேன்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”