Vaanilai Monika: பாப் கட்டிங், தலையை ஆட்டி ஆட்டி குழந்தைத் தானத்துடன் வானிலை செய்திகளை தொகுத்து வழங்கிய மோனிகாவை யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக 90’ஸ் கிட்ஸ்களுக்கு அது ஒரு எவர் கிரீன் மெமரி. சன் டிவியில் ஒளிபரப்பாகும் செய்தியின் ஒரு பகுதியாக வானிலை அறிக்கை வாசித்து, தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தார் மோனிகா.
’இருக்குறத வச்சு சமைக்குறவங்க தான் நல்ல சமையல்காரங்க’: மூர்த்தி அண்ட் பிரதர்ஸ்
மோனிகா 1985-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி சென்னையில் பிறந்தார். சென்னையில் உள்ள குயின் மேரீஸ் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். சின்ன வயதிலேயே மீடியா மீது ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு கல்லூரி படிக்கும் போதே, சன் டிவி-யில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ’வானிலை செய்தி’க்குப் பிறகு, சீரியல், சினிமா என இவரது பயணம் நீண்டது.
மோனிகா தமிழ் திரைப்படமான “திருவிளையாடல் ஆரம்பம்” படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். தனுஷ் - ஷ்ரேயா நடித்திருந்த இந்தப் படத்தை பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். அதோடு பல தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் இடம்பெற்றுள்ளார் மோனிகா. வள்ளி, தெய்வம் தந்த வீடு, மிஸஸ் சின்னத்திரை, மானாடா மயிலாட சீசன் 6, மற்றும் அபூர்வா ராகங்கள், சூப்பர் மாம், ரோஜா என அந்தப் பட்டியல் நீள்கிறது.
சோஷியல் மீடியா வந்த பிறகு, அதன் வழியே அரசியல், சமூகப் பிரச்னைகளைத் தைரியமாகப் பேசி வீடியோக்கள் வெளியிடத் தொடங்கினார். அப்படி இவர் வெளியிட்ட ஒரு வீடியோவால் இவரது செய்தி வாசிப்பாளர் வேலைக்குப் பிரச்னை வர, அந்த வேலையையே உதறினார்.
”சின்ன வயசிலிருந்தே எனக்கு அரசியல் மற்றும் மக்கள் பிரச்னைகளில் குரல் கொடுக்கும் ஆர்வம் இருந்துச்சு. அப்போ, அதற்கான வாய்ப்பு கிடைக்கலை. இப்போ கேள்வி கேட்கும் மெச்சூரிட்டியும் தைரியமும் வந்திருக்குது. அதனால், சமூக வலைதளங்களில் மக்கள் பிரச்னைக்கான என் குரல் பலமா ஒலிச்சுட்டுதான் இருக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது'' என முன்னணி இதழுக்கு அளித்த பேட்டியிலும் தெரிவித்திருந்தார்.
தற்போது எழுச்சி என்ற யூ-ட்யூப் சேனலில், சமூக பிரச்னைகள் குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். ”பேசின விஷயத்துல நியாயம் இருக்கா இல்லையான்னு பார்க்காம, பேசவே கூடாதுங்கிற மாதிரி சிலர் நினைச்சாங்க. என்னுடைய குடும்பத்தை நோட்டமிட்டாங்க. மகன் படிக்கிற ஸ்கூலைக் கண்டுபிடிச்சு அவங்க அவனை போட்டோ எடுத்து வெளியிடுறாங்க. சிம்பிளா சொல்லணும்னா, என்னோட மகனைக் காட்டி எனக்கு மிரட்டல் வந்ததுனு அதைச் சொல்லலாம்” என அரசியல் வட்டாரத்திலிருந்து தனக்கு வந்த அழுத்தைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார்.
மெழுகுச் சிலை ஷிவானி, கிளாஸி வித்யா: முழு புகைப்படத் தொகுப்பு
மோனிகாவின் கணவர் சாமுவேல் மேத்யூ, 2021 தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிக்கு (பிரஷாந்த் கிஷோர் போல) பிராண்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். தற்போது சினிமா சீரியலுக்கு பிரேக் வீட்டிருக்கும் மோனிகா, தற்போது ஒரு மனைவியாக தன்னால் முடிந்த உதவிகளை கணவருக்கு செய்து வருகிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.