Tamil TV Shows: விஜய் டிவியின் நீயா நானா ரியாலிட்டி ஷோ-வில், வட மாநிலத்தவர்கள் தமிழ் மொழியில் எழுதியதை படித்து வியக்க வைத்தார்கள். தமிழகத்தை சார்ந்தவர்கள் படிக்க முடியாமல் திணறி தலைகுனிய வைத்தார்கள். தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் ஒரு புறம், வேற்று மாநிலத்தைச் சேர்ந்த தமிழ் பேச, எழுத படிக்கத் தெரிந்தவர்கள் ஒரு புறம் என்று நிகழ்ச்சி நன்றாக இருந்தது.
’பூஜா ஹெக்டேவுக்கு மேக்கப் மேனாக மாறிய அல்லு அர்ஜூன்’: புகைப்படத் தொகுப்பு
விஜய் டிவி லாக்டவுன் சமயத்தில் இது போன்ற ரியாலிட்டி ஷோவை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. மறு ஒளிபரப்பிலும் நீயா நானா நிகழ்ச்சி அனைவரையும் ரசித்து பார்க்க வைக்கிறது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் போர்டில், திருச்சிற்றம்பலம் என்று எழுதி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் படிக்க சொல்ல, அந்த பெண் திக்கித் திணறி படித்தாலும் தவறாகவே படித்தார். ராஜஸ்தானை சேர்ந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, திருச்சிற்றம்பலம் என்று அழகாக தமிழர் பெருமைப்படும்படி வாசித்தார்.
20 பேர் முன்னிலையில் காதலியை கரம்பிடித்த கும்கி அஸ்வின்!
அடுத்து பண மதிப்பிழப்பு என்று கோபிநாத் எழுத, தமிழ் பெண் அதை வாசிக்கத் தெரியாமல் திணற, ஹிந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு பெண்மணி அழகாக பண மதிப்பிழப்பு என்று வாசித்தார். தாய்மொழி ஹிந்தி ஆனால், நிறைய பேசுவது தமிழில் தான் என்று கூறினார். அடுத்தது பதினெண் கீழ்கணக்கு என்று எழுதி இருந்தது தனக்குத் தெரியவில்லை என்று ஒரு இளைஞன் சொல்ல, ட்ரை பண்ணி பாருங்க என்றாலும் முடியவில்லை அவரால். இதற்கும் ஒரு வேற்று மொழி பெண், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சார் என்று போர்டில் இல்லாததையும் நூல்கள் என்று சேர்த்தே சொன்னார். பிறகு ஆச்சரியப்படும் வகையில், பதினெண் கீழ்க்கணக்கு, பதினெண் மேல்கணக்கு நூல்களை சொல்லி மெய் சிலிர்க்க வைத்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”