’’16 வயதினிலே’ தான் ‘ஆசை’ படத்துக்கு இன்ஸ்பிரேஷன்’: இயக்குநர் வசந்த்

பிரகாஷ் ராஜிடம் நான் மெரீனா கடற்கரையில் கதை சொன்னேன் என்று கூற முடியாது. முன்பே கதை சொல்லிவிட்டுஅவரை இன்டர்வியூ காண அவரை மெரீனா கடற்கரைக்கு வர சொன்னேன்.

Diector Vasanth, Tamil TV news, Zee Tamil show
Diector Vasanth, Tamil TV news, Zee Tamil show

Zee Tamil: ஜீ தமிழ் டிவியின் வீக் எண்ட் வித் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குநர் வசந்த், 16 வயதினிலே படம் ஹிட்டாகி, அதில் கமல், ஸ்ரீதேவி, ரஜினி கூட்டணி வெற்ற பெற்ற மாதிரி, ஆசை படத்திலும் மூவர் ஹிட்டவார் என்று யோசித்தே அஜீத், பிரகாஷ் ராஜ், சுவலட்சுமி ஆகியோரை நடிக்க வைத்தேன் என்று கூறினார். ஆசை படத்தில் நாயகன் அஜீத் ஒரு வகையில் வெற்றி பெறுவார். வில்லனாக பிரகாஷ் ராஜ் ஜொலிப்பார்.. நாயகி சுவலட்சுமியும் புகழ் பெறுவார் என்று எண்ணி மூவரையும் நடிக்க வைத்தேன். அதே போல எப்படிப்பட்ட வில்லனாக இன்று வளர்ந்து இருக்கார் பிரகாஷ் ராஜ், பயங்கர வில்லனாக ஆசை படத்தில் நடித்தவர். செல்லம்..செல்லம் ஐ லவ் யூ என்று சொல்லி காமெடி வில்லனாகவும் ஜொலிக்கிறார் என்று கூறினார் வசந்த்.

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: ‘பிகில்’ மறு வெளியீடு

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ்தான். இவர் இயக்குநர் வசந்த் குறித்து பேசுகையில், அங்கு எதிர்பாராத விதமாக வசந்த் கலந்துக்கொண்டு பிரகாஷ் ராஜ் குறித்து பேசினார். நான் இரண்டு பேருக்கு நடிப்பு கற்றுக்கொடுக்க மாட்டேன். ஒண்ணு உங்க சித்தப்பா என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுகாசினியைப் பார்த்து கூறினார். இன்னொருவர் பிரகாஷ் ராஜ் தான் என்றும் கூறினார். பிரகாஷ் ராஜிடம் நான் மெரீனா கடற்கரையில் கதை சொன்னேன் என்று கூற முடியாது. முன்பே கதை சொல்லிவிட்டுஅவரை இன்டர்வியூ காண அவரை மெரீனா கடற்கரைக்கு வர சொன்னேன்.

ரயில்வே, டெலிகாமில் இந்திய வர்த்தகத்தை இழக்கும் சீன நிறுவனங்கள்

அப்போது, ’பெங்களூருவில் இருந்து இங்கே வந்து இருக்கிறீர்கள். நடிப்பில் முழு கவனமும் செலுத்தும் எண்ணம் இருக்கிறதா. இல்லை பொழுது போக்குக்கு நடிக்க வந்துள்ளீர்களா? திரும்ப சென்று விடுவீர்களா என்றெல்லாம் கேட்டேன். காரணம், ஆசை படம் வெளிவந்த பின்னர் இவர் வேறு லெவலுக்கு போவார் என்று நான் நினைத்தது தான்’ என்றார்.  அப்போதுதான், 16 வயதினிலே படத்தில் கமல், ஸ்ரீதேவி, ரஜினி வெற்றி பெற்றது போல இந்த படத்தில் அஜீத், பிரகாஷ் ராஜ், சுவலட்சுமி வெற்றி பெறுவார்கள் என்று நினைத்தேன் என்று வசந்த் கூறினார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil tv news zee tamil weekend with star director vasanth

Next Story
செல்ல மகளுக்காக முழு நேரத்தையும் செலவிடும் ஆல்யா – சஞ்சீவ் ஜோடி!vijay tv alya manasa baby
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com