/tamil-ie/media/media_files/uploads/2020/03/Saravanan-Meenatchi-re-telecast-Vijay-TV.jpg)
tamil serial news, vijay tv tamil serial video, vijay tv serials, விஜய் டிவி, சரவணன் மீனாட்சி, கொரோனா வைரஸ்
Vijay TV Saravanan Meenatchi Serial : விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல். இதில் சரவணனனாக நடித்த ஆர்ஜே.செந்தில், ஸ்ரீஜா இருவரும் சூப்பர் ஜோடி என்று பேர் போன ஜோடி. இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டு இப்போது செட்டில் ஆகி விட்டனர். செந்தில் இப்போது ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இரட்டை வேடம் ஏற்று நடித்து வருகிறார்.
வீட்டு வாடகையை நாங்களே தருகின்றோம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டெல்லி அரசு!
தற்போது ரக்ஷிதா, ரியோ நடித்த சரவணன் மீனாட்சி சீசன் 3 விஜய் டிவியில் இன்று முதல் மதிய நேரத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. செந்தில், ஸ்ரீஜா இருவரும் சரவணன் மீனாட்சி முதல் சீசனில் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்து இருந்தனர். இந்த ஜோடி நடித்த சரவணன் மீனாட்சி முதல் சீசன் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் என்று சொல்லலாம். இவர்கள் இருவரும் மதுர சீரியலில் நடித்து பிரபலம் ஆனார்கள்.
ஏலேலோ.. எ எ எ எ எ எ எ எ ஏலேலோ ????
சரவணன் மீனாட்சி - இன்று மதியம் 2 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #SaravananMeenatchi#QuarantineTimes#VijayTelevisionpic.twitter.com/Ll3sHy7GEt
— Vijay Television (@vijaytelevision) March 30, 2020
செந்தில் - ஸ்ரீஜா இருவரும் நடித்த சரவணன் மீனாட்சி முதல் சீசனை இப்போது ஒளிபரப்பினால் என்ன? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ரக்ஷிதா, ரியோ நடித்ததை ஏன் ஒளிபரப்புகிறீர்கள்.. நாங்கள் அதை பார்க்க மாட்டோம் என்றும் கூறி வருகிறார்கள். போகப்போக கோபம் தணியும் என நம்புவோம்.
தனுஷ் ஹீரோயின் ஐஸ்வர்ய லெக்ஷ்மி, நூடுல்ஸ் மண்ட ரித்திகா – படத் தொகுப்பு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.