Tamil TV Show: கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து, சினிமா / சின்னத்திரை படபிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் அனைத்து சேனல்களும் பழைய எபிசோட்களை ஒளிபரப்பி வருகின்றன.
சேலையில் கவர்ச்சி: இணையத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் தர்ஷா தான்!
முன்னதாக, நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிய ‘கோடீஸ்வரி’ என்ற பெண்களுக்கான கேம் ஷோ, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. ராதிகாவின் ராடன் மீடியா தயாரித்த, ’கோடீஸ்வரன்’ என்ற கேம் ஷோ நிகழ்ச்சியை, சரத்குமார் தொகுத்து வழங்கியிருந்தார். இந்நிகழ்ச்சி சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிய கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுடன், திரைப்பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டு, தங்களைப் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். அந்த வகையில் ராதிகாவின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, சரத்குமாரும், வரலட்சுமி சரத்குமாரும் கலந்துக் கொண்டார்கள். அப்போது ஹோஸ்டாக மாறிய வரு, ராதிகா மற்றும் சரத்குமாரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
5 கேள்விகளுக்கு 45 நொடிகளுக்குள் டிக் டிக் டீச்சரின் உதவியோடு பதில் சொல்லலாம் என்றார் ராதிகா. உடனே இந்த டீச்சருக்கும், நாட்டாமை டீச்சருக்கும் எதாச்சும் சம்மந்தம் இருக்கா என்றார் சரத்குமார். இதை எதிர்பார்க்காத வருவும், ராதிகாவும் வாய்விட்டு சிரித்தார்கள். அதற்கு ‘உங்களுக்கு இது வேணுமா, இல்ல நாட்டாமை டீச்சர் வேணுமான்னு’ ராதிகா கேட்க, ’இல்ல இல்ல இது தான் வேணும், பட் மத்தவங்க குழப்பிக்குவாங்க இல்ல அதான்’ என்றார் சரத்குமார்.
ஜீ தமிழ் ’சத்யா’: அந்த ’டாம் பாய்’ நடிகையா இவங்க?
சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த வீடியோ க்ளிப்பிங்கை கலர்ஸ் தமிழ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”