புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் விஜய் டிவியில் தற்போது பல நிகழ்ச்சிகள ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. இதில் சீரியல் மற்றும் பிக்பாஸ் போன்று ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நட்சத்திரங்களை அழைத்து மற்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்புதில் விஜய் டிவி கை தேர்தந்தது.
Advertisment
அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களில் உள்ள நட்சத்திரங்களை வைத்து தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை. சீரியல்கள் நடித்து வரும் நடிகர் நடிகைகளை அவர்களின் குடும்பத்துடன் அழைத்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சி பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
அதே சமயம் தங்கள் சீரியலில் பார்த்து பிடித்துபோன நட்சத்திரங்களின் குடும்பத்தினரையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நடிகை ப்ரீனா ஆசாத்தை கலாய்ப்பது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
சின்னத்திரையில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கொடூர வில்லியாக நடித்து வருபவர்தான் ஃபரீனா ஆசாத். தான் விரும்பிய பாரதி கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று அவர் செய்யும் ஒவ்வொரு சூழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதுவே அவரது கேரக்டருக்கு உண்டான பாராட்டு.
அதேபோல் அவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகம். மேலும் சீரியலில் யாருக்கும் அடங்காமல் எதிர்த்து பேசுவது மாதிரியான கேரக்டரில் நடித்து வரும் ஃபரீனா மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும், அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருப்பவாகவே இருந்து வந்தார். ஆனால் தற்போது தனது கணவர் மற்றும் மாமனாருடன் வந்திருக்கும் அவர் அடக்கமாக எதுவும் பேசாமல் இருக்கிறார்.
நடுவர் கோபிநாத், ஃபரீனா இங்கே இருக்கிறாரா என்று கேட்க, அவரது தலைலைபிடித்து அவரது கணவர் ஆட்டுகிறார். அந்த அளவிற்கு அடக்கமாக இருக்கும் ஃபரீனாவிடம், உங்கள் அருகில் இருப்பது யார் என்று கேட்க, எனது கணவர் என்று சொல்கிறார். அதற்கு அடுத்து இருப்பது யார் என்று கேட்டால் தெய்வம் என்று சொல்கிறார். இதை கேட்டு தொகுப்பாளர் மா.க.பா. ஃபரீனாவை இந்த அளவிற்கு அடக்கமா பார்த்ததே இல்லை என்று சொல்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil