Sun TV, Vanakkam Thamizha: சன் டிவியின் 'வணக்கம் தமிழா' ரியாலிட்டி ஷோவில், 'ராஜா சின்ன ரோஜா' திரைப்படத்தில் பேபி நட்சத்திரமாக நடித்த ராகவி பங்கு பெற்றார். ராஜா சின்ன ரோஜா படத்துக்கு பிறகு பல்வேறு படங்களில் நடித்த ராகவி, பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் நடித்து வரும் இவர், பல்வேறு நினைவுகளை வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார்.
பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடம் மீது தாக்குதல்; துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி
எஸ்.பி.எம் அங்கிள் எங்க குடும்பத்துக்கு ஃபேமிலி ஃபிரண்ட். ராஜா சின்ன ரோஜா படத்துக்காக பப்ளியான குழந்தை நடச்சத்திரங்களை தேடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது எஸ்.பி.எம் அங்கிள் மம்மி கிட்ட என்னை நடிக்க வைக்க அனுமதி கேட்டாங்க. மம்மிக்கு முதலில் இஷ்டமில்லை.. அதனால் வேணாம்னு சொன்னாங்க. அங்கிள் விடலை. அப்புறமா அந்த படத்தில் நான் நடிச்சேன். நடிச்ச குழந்தைங்க எல்லாமே எல்லாரையும் எவ்ளோ டார்ச்சர் பண்ண முடியுமோ. அவ்ளோ டார்ச்சர் பண்ணிட்டோம். நான் ஸ்கூல் படிச்சுக்கிட்டு இருந்தேன். தொடர்ச்சியா 16 நாள் லீவ் போடறதுக்கு எல்லாம் அனுமதியே கிடையாது. அதனால் மூணு மணி வரைக்கும் ஸ்கூல் முடிச்சுட்டு, அப்புறமா ஷூட்டிங் ஸ்பாட் வருவோம்.
சருமம் பிரைட் ஆக வேண்டுமா? இருக்கவே இருக்கு கோதுமை மாவு, ஆட்டா
ரஜினி அங்கிள் சொல்வார், எல்லாரும் நல்லா சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு ஸ்பாட்டுக்கு வரட்டும்னு. நாங்க ஹையா ஜாலி ஜாலின்னு கத்துவோம். எஸ்.பி.எம் அங்கிள் ம்க்கும்... வந்ததே மூணு மணிக்கு இதுல ரெஸ்ட் வேறயா என்று முணுமுணுப்பார். ரகுவரன் அங்கிளை அவர் உயரத்தை வச்சு நல்லா கலாய்ப்போம். அவர் எல்லா பசங்களையும் வாலு வாலுன்னு கூப்பிடுவார் என்றார் ராகவி. ராஜா சின்ன ரோஜா படத்தில் நடித்த குழந்தைகளில் ராகவிதான் டீன் ஏஜ் மாதிரி இருப்பார். நடிகை ஷாலினி அப்போது பேபி...!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”