/tamil-ie/media/media_files/uploads/2018/09/Tamilrockers-Leaked-Chekka-Chivantha-Vaanam-sc.jpg)
Tamilrockers Leaked Chekka Chivantha Vaanam
Mani Ratnam's Chekka Chivantha Vaanam Leaked on Tamilrockers: செக்கச் சிவந்த வானம் வெளியான முதல் நாளன்றே இணையத்தில் தமிழ்ராக்கர்ஸ் இப்படத்தை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More: Tamilrockers website: மிரட்டும் வில்லன், தமிழ் ராக்கர்ஸ்! என்ன செய்கிறது சினிமா உலகம்?
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, ஜோதிகா, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Chekka Chivantha Vaanam Review : 'பேக் டு ஃபார்ம்’ மணிரத்னம்!
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேறொப்பை பெற்றது. குறிப்பாக இப்படம் விஜய் சேதுபதி மற்றும் சிம்புவிற்கு திருப்பு முனையாக அமைந்துள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.
Tamilrockers Leaked Chekka Chivantha Vaanam: செக்க சிவந்த வானம் படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ் :
சென்னையின் செல்வாக்கான மாஃபியாவாக சேனாபதியும், அவருக்கு பின் அவர் அரியாசனத்தில் அமரப்போவது யாரென அவர் மகன்களுக்குள் நடக்கும் வாரிசு யுத்தமே `செக்கச் சிவந்த வானம் படத்தின் கதை.
/tamil-ie/media/media_files/uploads/2018/09/Tamilrockers-Leaked-Chekka-Chivantha-Vaanam.jpg)
இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.