/tamil-ie/media/media_files/uploads/2019/05/neeya-2-movie-1b.jpg)
Neeya 2 Full Movie Free Download, நீயா 2 ஃபுல் மூவி, Neeya 2 Tamilrockers
TamilRockers Leaked Neeya 2 Tamil Movie to Free Download in online: நீயா 2 படத்தை ஆன் லைனில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். படம் வெளியான நாளிலேயே முழுப் படத்தையும் திருட்டுத்தனமாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில், புதிய படங்களை ரிலீஸ் தினத்தன்றே வெளியிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேட்ட, விஸ்வாசம், மாரி 2 வரிசையில் அண்மையில் வெளியான காஞ்சனா 3, மிஸ்டர் லோக்கல், மான்ஸ்டர் ஆகிய படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2019/05/neeya-2-movie-b-1-300x211.jpg)
Neeya 2 Full Movie to Free Download: நீயா 2 படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
இந்தச் சுழலில் நடிகர் ஜெய், நடிகைகள் ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா நடிப்பில் மே 24-ம் தேதி வெளியான நீயா 2 படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. ராய் லட்சுமி, பாம்பு மனுஷியாக நடித்திருக்கும் படம் இது.
Read More: Neeya 2 Movie Review: மிரட்டும் பாம்பு மனுஷி
20 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த காதலனை மீட்க பாம்பு மனுஷி நடத்தும் பழிவாங்கும் யுத்தத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு சுமாரான ரிவ்வியூக்களே வந்தபோதும், பாம்பு கதைகளுக்கே உரிய வரவேற்பு இருப்பதையும் மறுக்க முடியாது. முக்கிய தொலைக்காட்சி நிறுவனம் பெரும் தொகைக்கு இதன் சேட்டிலைட் உரிமையை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் இந்தப் படத்தின் முழுப் பகுதியையும் ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது அனைத்து தரப்பினருக்கும் ஷாக். படத்தின் வசூலையும் இது பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.