/tamil-ie/media/media_files/uploads/2017/10/amala-paul.jpg)
tamilrockers leaked amala paul's poiyattam movie
Poiyattam in Tamilrockers : ’மேயாத மான்’ படத்தின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்த ‘ஆடை’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் பெற்றது. அமலா பாலின் நடிப்பை பலர் பாராட்டவும் செய்தனர். இதையடுத்து ‘அதோ அந்த பறவை போல’ எனும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அமலா.
புதிதாக உதயமாகும் பொள்ளாச்சி மாவட்டம்? 40 மாவட்டங்களை எட்டும் தமிழகம்!
இதனை தொடர்ந்து, அமலா பால் கன்னடத்தில் நடிகர் சுதீப்புடன் நடித்த ஹீப்ளி எனும் படத்தை தமிழில் டப்பிங் செய்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணா. அந்த படத்தின் பெயர் பொய்யாட்டம். இதனை செந்தில் ஆனந்த் என்பவர் வெளியிட்டுள்ளார். மருந்து தயாரிப்பில் நடக்கும் முறைகேடுகளை எடுத்து சொல்லும் படமான இது 2006-ல் கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தாண்டு ‘தல’ பொங்கலைக் கொண்டாடும் சீரியல் பிரபலங்களின் லிஸ்ட்!
இந்நிலையில் தமிழில் கடந்த வாரம் வெளியான, இப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. நேரடி தமிழ் படங்களை வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ், டப்பிங் படங்களையும் இப்படி லீக் செய்வது விநியோகஸ்தர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.