TV Celebrities Thala Pongal : பொங்கல் களை கட்ட ஆரம்பித்து விட்டது. வயலில் விளைந்த நெல்லை, அரிசியாக்கி புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிப்படுவதோடு, விவசாயமும் உழவர்களும் நமக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் உணர வைப்பதற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Advertisment
’தல’ தீபாவளியைப் போலவே ’தல’ பொங்கலுக்கும் சீர் வரிசை செய்வது தமிழர்களின் வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ’தல’ பொங்கலை கொண்டாடும் சீரியல் பிரபலங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
நித்யா ராம் - கெளதம்
நித்யா ராம் திருமணத்தின் போது
Advertisment
Advertisements
சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘நந்தினி’ தொடர் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பிரபலமானவர் நித்யா. இவருக்கு 2014-ம் ஆண்டு வினோத் என்பவருடன் திருமணமானது. ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெளதம் என்பவரை இரு வீட்டாரின் சம்மதத்துடன் கரம் பிடித்தார் நித்யா. அந்த வகையில் இந்த பொங்கல் இவர்களுக்கு தல பொங்கல்.
மைனா நந்தினி - யோகேஷ்
மைனா நந்தினி திருமணம்...
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் மைனா நந்தினி. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினாலும், மன உளைச்சலாலும் சில மாதங்களிலேயே தற்கொலை செய்துக் கொண்டார் கார்த்திக். அதன் பிறகு தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் நந்தினி. இந்நிலையில் ’நாயகி’, ‘சத்யா’ போன்ற தொடர்களில் நடித்த யோகேஷ்வரனை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களின் திருமணம் சமீபத்தில் நடந்தது.
’பகல் நிலவு’ சீரியலில் நடித்து வந்த அன்வர் – சமீரா கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். ஏற்கனவே இவர்கள் காதலில் இருந்து தான், பகல் நிலவு சீரியலில் ஜோடிகளாக ஒப்பந்தமாகினர். இதனை அவர்களே பல நேர்க்காணல்களில் உறுதிப்படுத்தியுள்ளனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் முறைப்படி மண வாழ்க்கையில் இணைந்தனர்.
ஸ்வேதா வெங்கட் - ஸ்ரீகந்தன்
ஸ்வேதா வெங்கட் திருமணம்
இசையருவி சேனலில் தொகுப்பாளினியாக இருந்து பிறகு சீரியலுக்கு சென்றவர் ஸ்வேதா. இவர் தனது காதல் கணவர் ஸ்ரீகந்தனை கடந்த பிப்ரவரியில் கரம் பிடித்தார்.
சஞ்சீவ் - ஆல்யா மானசா
சஞ்சீவ் - ஆல்யா மானசா
’ராஜா ராணி’ சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் கார்திக் – செம்பா ஜோடி ரசிகர்களிடம் வெகுவாக பிரபலமாகினர். சீரியல் முடிவதற்குள் சஞ்சீவும், ஆல்யா மானசாவும் நிஜ காதலர்களாக மாறினர். இருப்பினும் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காததால், கடந்த மே மாதம் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக, செப்டம்பரில் தெரிவித்திருந்தார் சஞ்சீவ். தற்போது ஆல்யா கர்ப்பமாகவும் இருக்கிறார்.
ஜெனிஃபர் - சரவணன்
சரவணன் - ஜெனிஃபர்
செம்பருத்தி சீரியலில் ஆதியின் மீது ஆசைப்படும் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜெனிஃபர். இவர் தான் காதலித்து வந்த சரவணனை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். பொறியியல் படித்திருக்கும் சரவணம் சொந்தமாக கார் வைத்து, ஓட்டுநராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா ராணி, தெய்வமகள் ஆகிய சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷப்னம். 2017 செப்டம்பரில் இவருக்கும் ஆர்யனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. மறு வருடம் 2018 காதலர் தினத்தில் திருமணம் இருக்கும் என முதலில் சொன்னார். ஆனால் அது தள்ளிப்போக, அந்த வருடமே ஜூனில் இருக்கும் என்றார். அதுவும் தள்ளிப்போனது. ஷப்னம் 'ராஜா ராணி' சீரியலில் பிஸியாக இருந்ததால், இந்த இரண்டு ஆண்டு கால இடைவெளியாம். 'ராஜா ராணி' முடிவடைந்ததுமே அடுத்த சீரியல் வாய்ப்பும் வர, இனியும் திருமணத்தை தள்ளிப் போட முடியாது என கடந்த செப்டம்பரில் மண வாழ்க்கையில் இணைந்தார்கள்.
என்.எஸ்.கே ரம்யா - சத்யா
ரம்யா திருமண நிகழ்வு
பிக் பாஸ் – 2 ல் போட்டியாளராகக் கலந்துக் கொண்ட, பின்னணி பாடகி என்.எஸ்.கே.ராம்யா, சீரியல் நடிகர் சத்யாவை கடந்த செப்டம்பரில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ‘நீலகுயில்’ சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் சத்யா.
வைஷ்ணவி - அஞ்சான்
வைஷ்ணவி திருமணம்
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளரான வைஷ்ணவி, தனது காதலர் அஞ்சானை கடந்த ஜூன் மாதம் கரம் பிடித்தார். நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துக் கொண்ட எளிமையான திருமணமாக அது இருந்தது. மேலே குறிப்பிட்டுள்ள பிரபலங்கள் இந்தாண்டு தல பொங்கலை கொண்டாடுகிறார்கள்!