Tamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers Leaked Tamil Sandakozhi 2 Full Movie online:விஷால் படமான சண்டக்கோழி 2-க்கு நிஜ வில்லன் தமிழ் ராக்கர்ஸ்

By: Updated: October 19, 2018, 01:38:35 PM

Sandakozhi 2 in Tamilrockers: சண்டக்கோழி 2 படத்தையும் முழுமையாக இணையதளத்தில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்! இந்த திருட்டுத் தனத்தை செய்ததுடன் விஷாலை சீண்டும் ஒரு காரியத்தையும் தமிழ் ராக்கர்ஸ் அரங்கேற்றியிருப்பதாக வரும் தகவல்கள்தான் கொடுமை!

விஷால் கேரியரில் சண்டக்கோழி படத்திற்கு தனி சிறப்பு உண்டு. அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக தூக்கி நிறுத்தியது அந்தப் படம்தான்! எனவே அதே லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தை விஷாலே சொந்தமாக தயாரித்தார்.

Read More: Vada Chennai in Tamilrockers: வட சென்னை, இணையதளத்தில் ரிலீஸ்- அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்

சண்டக்கோழி முதல் பாகத்தில் கலக்கிய மீரா ஜாஸ்மினுக்கு பதிலாக இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் ஆனார். விஷாலின் அபிமான நடிகையான வரலட்சுமி சரத்குமார் வில்லியாக வந்து கெத்து காட்டியிருக்கிறார்.

Tamilrockers Leaked Sandakozhi 2 Full Tamil Movie: விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடித்த சண்டக்கோழி 2, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு அதிர்ச்சி Tamilrockers Leaked Sandakozhi 2 Full Tamil Movie: விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடித்த சண்டக்கோழி 2, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு அதிர்ச்சி

விஷால், வரலட்சுமி, ராஜ்கிரண் ஆகியோரின் நடிப்பு இந்தப் படத்தில் பேசப்படுகிறது. விஷால், லிங்குசாமி ஆகிய இருவரின் கேரியருக்கும் இந்தப் படத்தின் வெற்றி மிக அவசியம்! எனவே படத்தை அக்டோபர் 18-ம் தேதி வெளியிட்டுவிட்டு, ரிசல்ட்டுக்காக விஷால் தரப்பு காத்திருந்தது.

அப்போது ‘ரிவ்வியூ’ வடிவில் கலவையான தகவல்கள் வந்து கொண்டிருந்தன. சிலர் படம், ‘சூப்பர்’ என பதிவிட்டார்கள். வேறு சிலர், ‘பரவாயில்லை ரகம்’ என்றும், இன்னும் சிலர், ‘மொக்கை’ என்றும் கருத்து கூறியபடி இருந்தனர். ஆனாலும் எப்போதுமே லிங்குசாமி படம், ஃபேமிலிக்கான ஃபுல் மீல்ஸாக இருக்கும் என்கிற விதிமுறை இதிலும் மீறப்படவில்லை. எனவே கலெக்‌ஷனில் குறை இருக்காது என விஷால் தரப்பு நம்பிக்கையுடன் இருந்தது.

Read More: Tamilrockers website: மிரட்டும் வில்லன், தமிழ் ராக்கர்ஸ்! என்ன செய்கிறது சினிமா உலகம்?

அப்போதுதான் விஷால் தரப்புக்கு, வழக்கம்போல இன்னொரு வில்லன் உள்ளே புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்ட தகவல் வந்து சேர்ந்தது. அந்த வில்லன் தமிழ் ராக்கர்ஸ்தான்! தியேட்டரில் படம் வெளியான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் முழுப் படத்தையும் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது.

விஷால் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இருபெரும் பதவிகளை வைத்துக்கொண்டு பைரசிக்கு எதிராக குரல் கொடுத்தார். நேரடியாக சென்று திருட்டு விசிடி-களை பிடித்த அனுபவமும் அவருக்கு உண்டு. ஆனால் இந்த தமிழ் ராக்கர்ஸின் இணைய அட்டாக்கை இதுவரை அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

விஷாலை கடுப்பேற்றும் விதமாக தமிழ் ராக்கர்ஸ் செய்திருப்பதாக கூறப்படும் இன்னொரு விவகாரம்தான் பெரிய ஷாக்! வழக்கமாக தனது பிரிண்ட்களில் ஒரு இடத்தில் தனது வாட்டர் மார்க்கை பதிவிடும் தமிழ் ராக்கர்ஸ், இந்தப் படத்தின் பிரிண்டில் 6 இடங்களில் பதித்திருப்பதாக கூறப்படுகிறது.


விஷாலுக்கு சவால் விடும் விதமாக மற்றப் படங்களைவிட சண்டக்கோழி 2 பிரிண்டை உயர் தரத்தில் வெளியிட்டும் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறதாம் தமிழ் ராக்கர்ஸ்! இந்தத் தகவல்கள் விஷால் தரப்புக்கும் போய்ச் சேர, செம கடுப்பாகியிருக்கிறார் விஷால்!

‘சங்கத்தையே அபராதத்துல ஓட வச்சிருமோ தமிழ் ராக்கர்ஸ்’ என்பதுதான் சினிமா வட்டார பேச்சு! ஏற்கனவே அக்டோபர் 17-ம் தேதி வெளியான வட சென்னையையும் படு சூடாக இணையத்தில் உலவ விட்டது தமிழ் ராக்கர்ஸ்! இப்போது சண்டக்கோழி 2-ஐயும் பிரியாணி போடுகிறது. இதற்கு என்னதான் முடிவு?


 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tamilrockers leaked sandakozhi 2 full tamil movie

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X