Advertisment
Presenting Partner
Desktop GIF

Vada Chennai in Tamilrockers: வட சென்னை, இணையதளத்தில் ரிலீஸ்- அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்

Tamilrockers Leaked Vada Chennai Tamil Movie online: தமிழ் ராக்கர்ஸ் மூலமாக இணையதளத்தில் ரிலீஸ் ஆனது வட சென்னை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilrockers Leaked Vada Chennai Tamil Movie: இணையத்தில் வட சென்னையை ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers Leaked Vada Chennai Tamil Movie: இணையத்தில் வட சென்னையை ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்

Vada Chennai in Tamilrockers: வட சென்னை, தமிழ் படம் ரிலீஸான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் புண்ணியத்தில் ஆன் லைனில் வெளியாகியிருப்பது தனுஷ் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது. சுமா 65 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், முழுமையாக இணையதளத்தில் வெளியாகியிருப்பதால் வசூல் ரீதியாக பாதிப்பை சந்திக்குமோ? என்கிற கவலை தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் அட்டகாசத்தை ஒழிக்க தமிழ் சினிமா உலகம் என்ன செய்யப் போகிறது?

Advertisment

ஜோதிகாவின் காற்றின் மொழி லீக்? அடாவடியில் திருட்டுத் தளங்கள்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், வட சென்னை! தனுஷ், வெற்றிமாறன் ஆகிய இருவருக்குமே இது கனவுப் படம்! சுமார் 3 ஆண்டுகள் தயாரிப்பில் இந்தப் படம் அக்டோபர் 17-ம் தேதி (நேற்று) வெளிவந்திருக்கிறது.

Read More: Tamilrockers Leaked Sandakozhi 2: 'கடுப்பேத்துறாங்க மை லார்ட்' விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்

Read More; சர்கார் டீசர் ரிலீஸ் : என்ன நண்பா... நண்பி... ரெடியா? தளபதி சரவெடி பேச்சு இன்றும் இருக்கு...

Read More: Tamilrockers website: மிரட்டும் வில்லன், தமிழ் ராக்கர்ஸ்! என்ன செய்கிறது சினிமா உலகம்?

வட சென்னை படத்திற்கு பரவலாக நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தின் பட்ஜெட் 65 கோடி ரூபாய் என்கிறார்கள். தனுஷின் வண்டர்பார் பில்ம்ஸ் நிறுவனமே இதை தயாரித்தது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து, வசூல் ரீதியாக இது பெரும் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilrockers Leaked Vada Chennai Tamil HD Movie Online to Download:தனுஷ் நடித்த வட சென்னை இணையதளத்தில் ரிலீஸ் செய்தது தமிழ் ராக்கர்ஸ் Tamilrockers Leaked Vada Chennai Tamil Movie:வட சென்னைக்கு தியேட்டர் ரெஸ்பான்ஸ் வலுவாக இருக்கிறது. அதை தமிழ் ராக்கர்ஸ் சீர்குலைக்குமோ என்பதே ரசிகர்களின் கவலை!

இந்தச் சூழலில் தமிழ் சினிமாவின் நிரந்தர வில்லனான தமிழ் ராக்கர்ஸ் இந்தப் படத்திலும் தனது வேலையை காட்டிவிட்டது. வட சென்னை ரிலீஸான சில மணி நேரங்களில் ஆன் லைனில் முழுப் படத்தையும் வெளியிட்டு மொத்த திரையுலகையும் அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உழைப்பு மற்றும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டு அனைவரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொண்டிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்!

Read More: வடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்...

Read More: நிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு

தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க விஷால் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் ஆன பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறினார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தமிழ் ராக்கர்ஸ் நாளுக்கு நாள் தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்துக்கொண்டே இருக்கிறது.

தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், கிஷோர், சமுத்திரகனி, பவான், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த படம் வட சென்னை. வட சென்னை படத்தை முதல் நாளிலேயே திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்து திரையுலகின் அதிர்ச்சி பல்ஸை அதிகரிக்க வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்! இதற்கு முடிவே இல்லையா? என கதற ஆரம்பித்திருக்கிறது திரையுலகம்!

Isaimini Dhanush Tamil Rockers Madras Rockers Vetrimaaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment