/tamil-ie/media/media_files/uploads/2018/12/maari-2.jpg)
Maari 2
Madras High Court Banned 16000 Websites Before Maari 2 Release: மாரி 2 படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உட்பட பலரும் நடித்துள்ள படம் மாரி 2. இப்படம் நாளை எல்லா திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.
Maari 2 leak ban : மாரி 2 படத்தை இணையத்தில் வெளியிட தடை
இப்படத்தின் ரிலீசை முன்னிட்டு நேற்று முன் தினம் படக்குழுவினர் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மேலும் மாரி 2 படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு தியேட்டர்களிலும் டிக்கெட் விற்பனைகள் ஹவுஸ்ஃபுல் ஆனது.
தனுஷ் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக காத்திருக்கும் மாரி 2 படத்தினர் சட்டவிரோத இணையங்கள் லீக் செய்வதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாரி 2 படத்தினை இணையத்தில் லீக் செய்வதை தடுக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் மனு அளித்தது.
மாரி 3 படம் வருகிறதா? தனுஷ் என்ன சொல்கிறார்?
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.