New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Ajiths-Valimai-Look.jpg)
Ajith's Valimai Look
ஷார்ட் பிரௌனி ஹேர், கிளீன் ஷேவ் என அஜித்தின் நியூ லுக் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
Ajith's Valimai Look
Valimai : 'நேர்க்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித்குமாருக்கு சண்டைக் காட்சியில், கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
சட்டப்படி அர்ச்சனாவை விவாகரத்து செய்றதுக்குள்ள இப்படியொரு முடிவா திருநா?
Another latest exclusive video of #Ajith sir in Leela Palace today morning ???????? pic.twitter.com/6OX3mUnVOA
— TN Ajith E-Fans (@tn_ajith) February 21, 2020
முதலுதவி மட்டும் செய்து கொண்டு தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்தார் அஜித். இருப்பினும் அஜித்துக்கு காயம் ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சென்னை லீலா பேலஸில் தனது நெருங்கிய உறவினரின் திருமணத்தில் அஜித் பங்கேற்ற படங்களும், வீடியோவும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. அதில் அஜித்தைப் பார்த்த ரசிகர்கள், அவரது தோற்றம் குறித்த தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள். அதன்படி, ஷார்ட் பிரௌனி ஹேர், கிளீன் ஷேவ் என அஜித்தின் நியூ லுக் அடங்கிய புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இதை வைத்துப் பார்க்கும் போது ’வலிமை’ படத்தில் இந்த லுக்கில்தான் அஜித் நடிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
க்ரைம் த்ரில்லர் ‘மாஃபியா’: ரிலீஸன்றே வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அந்தத் திருமணத்தில் பிளாக் கோட் - ஷூட்டில் அஜித்தும், கிரீன் வித் பிங்க் சேலையில் ஷாலினியும் அட்டகாசமாக வலம் வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.