அஜித்துக்கு தமிழக அரசின் இப்படி ஒரு கெளரவமா?

அஜித்தின் ரசிகர்கள் இந்த மீமை கொண்டாடி அவரை புகழ்ந்து வருகின்றனர்.

By: Updated: February 12, 2020, 03:41:35 PM

Kavalan App : இயக்குநர் சிவா இயக்கிய ‘விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியானது. நடிகர் அஜித், நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இன்றைய செய்திகள் Live : சென்னையில் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.147 அதிகரிப்பு

படத்தில், அஜித்தின் மகளை (அனிகா சுரேந்திரன்) ஒரு கும்பல் துரத்தும். அதைப் பற்றி தெரிவிக்க தனது தாயார் நயன்தாராவை தொலைபேசியில் தொடர்பு கொள்வார் அனிகா. அந்த நேரத்தில் அங்கு வரும் அஜித், ரவுடி கும்பலுடன் சண்டையிட்டு, தனது மகளை காப்பாற்றுவார். இந்தக் காட்சியை வைத்து தேனி மாவட்ட காவல்துறை, காவலன் ஆப்பைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மீம் ஒன்றை தயாரித்திருக்கிறது.

அஜித்தின் ரசிகர்கள் இந்த மீமை கொண்டாடி அவரை புகழ்ந்து வருகின்றனர். கிராமப்புற பின்னணியை கதைகளமாகக் கொண்ட இப்படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.  டி.இமான் இசையமைத்திருந்த விஸ்வாசம் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

மின்சார கண்ணா படத்தின் காப்பியா ஆஸ்கார் விருது வென்ற பாரசைட் ? : கேட்டாலே ஷாக் அடிக்குதே…

இதற்கிடையில், அஜித் தனது 60 வது படமான ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Thala ajith viswasam kavalam app meme

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X