Advertisment

தலைவர் 168: ரஜினியுடன் இணைந்த பிரபல எழுத்தாளர்

எழுத்தாளரான வேல ராமமூர்த்தி, ’குற்ற பரம்பரை’, ’பட்டத்து யானை’ போன்ற புத்தகங்களுக்காக பிரபலமாக அறியப்பட்டவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalaivar 168, தலைவர் 168, வேல ராமமூர்த்தி

Thalaivar 168

Thalaivar 168 : 'தர்பார்’ படத்தையடுத்து, இயக்குநர் சிவாவின் அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கும் இந்தப் படம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Advertisment

’கங்கனாவை தவிர வேறு யாராலும் ஜெயலலிதாவாக சிறப்பாக நடிக்க முடியாது’ – ஏ.எல்.விஜய்

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பிரமாண்ட குழுவைக் கொண்டுள்ள தலைவர் 168 படத்தில் மற்றுமொரு பிரபல நடிகர் இணைந்துள்ளார். அதாவது பிரபல குணச்சித்திர நடிகர் வேலராமமூர்த்தி தலைவர் 168 படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘அம்மா என்றால் அன்பு’ ஜெயலலிதா நினைவு புகைப்படங்கள்

அடிப்படையில் எழுத்தாளரான வேல ராமமூர்த்தி, ’குற்ற பரம்பரை’, ’பட்டத்து யானை’ போன்ற புத்தகங்களுக்காகவும், ’கிடாரி’, ’மத யானைக் கூட்டம்’ போன்ற திரைப்படங்களுக்காகவும் நன்கு அறியப்பட்டவர். நடிப்பைப் பொறுத்தவரை குணச்சித்திரமும் சரி, வில்லத்தனமும் சரி மிக இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளுவார். தவிர, அவர் ரஜினியை சந்தித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

Rajinikanth Sun Pictures
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment