Advertisment

Thalapathy 63: ஜூன்.21ம் தேதி மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகிறது டைட்டில்!

Thalapathy 63 movie: சரியான நேரத்தில் தளபதி 63 படத்தின் அப்டேட் உங்களை வந்தடையும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thalapathy 63 update, hbd thalapathy vijay,

Thalapathy 63 Update: ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 63’ என்றே குறிப்பிட்டு வருகிறார்கள் படக்குழுவினர். பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கிறாராம். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில் வரும் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதோடு படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் அப்டேட் கேட்டு வந்தனர். இதற்கு ”சரியான நேரத்தில் தளபதி 63 படத்தின் அப்டேட் உங்களை வந்தடையும்” என பதிலளித்திருந்தார் அர்ச்சனா.

இதற்கிடையே ”இன்று மாலை 6 மணிக்கு தளபதி 63 படத்தின் அப்டேட் வெளியாகும், காத்திருக்க தொடங்குங்கள்” என்று ட்விட்டரில் அறிவித்திருந்தார் அர்ச்சனா.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், "21-06-19 / 5:59 pm வரை தான் தளபதி 63 என்பதை நீங்கள் பயன்படுத்தப் போகிறீர்கள். அதன்பிறகு, அது....... என்றாகப் போகிறது. முதல் லுக் அனைவரது எதிர்பார்ப்பையும் மிஞ்சி இருக்கும். ஜூன் 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு செகன்ட் லுக் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

ஆக, ஜூன் 21ம தேதியான விஜய் பிறந்தநாள் அன்று மாலை 6 மணிக்கு, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது.

 

Actor Vijay Atlee Thalapathy Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment