கொண்டாட தயாரான புள்ளிங்கோ: தளபதி 64 FL-க்காக வெறித்தன வெயிட்டிங்
Thalapathy 64 first look : விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக், டிசம்பர் 31ம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தளபதி ரசிகர்கள் உற்சாக துள்ளலில் அதை தேசிய அளவில் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
Thalapathy 64 first look : விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக், டிசம்பர் 31ம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தளபதி ரசிகர்கள் உற்சாக துள்ளலில் அதை தேசிய அளவில் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
vijay, actor vijay, thalapathy64, vijay 64, lokesh kanagaraj, vijay sethupathi, anirudh, first look, december 31, new year celebration, twitter, trending, fans, விஜய், விஜய் சேதுபதி, தளபதி 64, விஜய் 64, லோகேஷ் கனகராஜ், அனிருத், பர்ஸ்ட் லுக், டிசம்பர் 31, புத்தாண்டு கொண்டாட்டம், டுவிட்டர், டிரெண்டிங்
Thalapathi 64 First Look: கொண்டாட தயாராகிவிட்டார்கள் நடிகர் தளபதி விஜய்யின் புள்ளிங்கோ. ஆம், தளபதி விஜய் 64 FL-க்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். புத்தாண்டுக்கு முந்தைய தினமான இன்று (டிசம்பர் 31) மாலையில் வெளியாகிறது ஃபர்ஸ்ட் லுக்.
Advertisment
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக், டிசம்பர் 31ம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தளபதி ரசிகர்கள் உற்சாக துள்ளலில் அதை தேசிய அளவில் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜயை வைத்து படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனனும் நடித்து வருகின்றனர். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில், தளபதி 64 அல்லது விஜய் 64 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
கத்தி படத்தை தொடர்ந்து, இந்த படத்துக்கும் அனிருத் இசைப்பணியை மேற்கொண்டு உள்ளார். ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே படத்தில் நடித்துவருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, கண்பார்வையற்ற குழந்தைகள் பள்ளியில் படக்குழுவினர் நடந்துகொண்ட விதம் என தளபதி 64 படம் தொடர்பான பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள், விளம்பரங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில், படம் குறித்த முக்கிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
இதனிடையே, டிசம்பர் 28ம் தேதில படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய் ரசிகர்கள் அனைவரும் என்ன அறிவிப்பு என்று வழிமேல் விழிவைத்து காத்து கொண்டிருக்க....
தளபதி 64/ விஜய் 64ன் பர்ஸ்ட் லுக், டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ,படக்குழு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பையே, விஜய் ரசிகர்கள் தேசிய அளவில் டிரெண்ட் ஆக்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதுக்கே, இந்த கொண்டாட்டம்னா, 31ம் தேதி 5 மணி போலவே, அவங்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பிச்சிரும் என உற்சாகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.