”கஷ்டங்கள் அனைத்தும்...” சாந்தனுவுக்கு விஜய் கொடுத்த இன்ஸ்பைரிங் அட்வைஸ்!

விஜய் தலைமையில் தான் கீர்த்தியை மணம் முடித்தார் சாந்தனு...

விஜய் தலைமையில் தான் கீர்த்தியை மணம் முடித்தார் சாந்தனு...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
”கஷ்டங்கள் அனைத்தும்...” சாந்தனுவுக்கு விஜய் கொடுத்த இன்ஸ்பைரிங் அட்வைஸ்!

Thalapathy Vijay's Advice to Shanthanu : நடிகர் சாந்தனு பாக்யராஜ், தளபதி விஜய்யின் தீவிரமான ரசிகர் என்பதும், தனது திருமணத்தைக் கூட அவர் தலைமையில் தான் நடத்திக் கொண்டார் என்பதும் அனைவருக்கும் அறிந்ததே. தற்போது 'மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் சாந்தனு ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருவதால், அவரது நீண்டகால கனவு நனவாகியுள்ளது.

Advertisment

ஹாய் கைய்ஸ் : சென்னை அருகே சீன கப்பல் – திக் திக் மனநிலையில் சென்னைவாசிகள்…

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சாந்தனு, விஜய்யை தனது மூத்த சகோதரராக கருதுவதாகவும், தனிப்பட்ட பிரச்னைகள் முதல் நிதி சிக்கல்கள் வரை அனைத்தையும் அவருடன் தான் பகிர்ந்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். கஷ்டங்கள் அனைத்தும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும், அவற்றின் காரணமாக ஒருபோதும் நமது கனவுகளை விட்டுவிடக்கூடாது என்றும் விஜய் சாந்தனுவுக்கு அட்வைஸ் செய்தாராம்.

Advertisment
Advertisements

மேலும் தொடர்ந்த சாந்தனு, தான் தனியாக உட்கார்ந்திருக்கும் போதெல்லாம், விஜய் தன்னிடம் வந்து தோள்களைத் தட்டி, "எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது?" என்று கேட்பார் எனவும் குறிப்பிட்டார். டெல்லியில் முதல் நாள் படப்பிடிப்பின் போது விஜய்யின் பின்னால் சென்ற சாந்தனு, அவரது தோளை தொட்டதாகவும், திரும்பிப் பார்த்த விஜய்,  அன்புடன் கட்டியணைத்ததாகவும், மகிழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார்.

’96’ மேஜிக் சமந்தா ஷர்வானந்தின் ‘ஜானு’விலும் நடக்குமா?

தவிர, ‘மாஸ்டர்’ மட்டுமல்லாமல், மணிரத்னம் தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’ படத்திலும் சாந்தனு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: