/tamil-ie/media/media_files/uploads/2020/10/Thalapathy-Vijay-Discussion-with-Makkal-Iyakkam-Members.jpg)
தளபதி விஜய்
Thalapathy Vijay: விஜய் மக்கள் இயக்கம் சரியான நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் விஜய்.
Tamil News Today Live: பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை
சென்னை அருகே உள்ள பனையூரில், மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார் விஜய். அதோடு அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். தமிழகத்தில் 2021 சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், திருச்சி தெற்கு, திருச்சி மேற்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் விஜய். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இருக்கு இன்னும் மழை இருக்கு: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் நிர்வாகிகள் மூலம் நிறைய நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொழில்முறையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய், அடுத்தப்படத்துக்கு கதை கேட்பதில் பிஸியாக இருக்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.