தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். அவரின் ரசிகர்கள் பலர், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து, விஜய் குறித்த ஒவ்வொரு விஷயங்களையும் பிரமாண்டமாக கொண்டாடுவார்கள்.
ரஜினிக்கு ஃபோன் செய்த அஜித்: என்ன காரணம் தெரியுமா?
அப்படி விஜய்யின் தீவிர ரசிகராக சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருந்தவர் பாலா. டிவிட்டரில் தனது ஐடி பெயரைக் கூட பாலா விஜய் என்று தான் வைத்திருக்கிறார். கடைசியாக கடந்த 11-ம் தேதிக்குப் பிறகு ட்வீட் எதுவும் போடவில்லை.
அன்றைய தினம் பாலா போட்டிருந்த ட்வீட்களில் ஒரு வித வெறுப்பு தெரிந்தது. “ஒரு மனுஷன் எவ்ளோ வலி தான் தாங்குவான். என் வாழ்க்கை ஃபுல்லா இழப்புகள் மட்டும்தான் இருக்கு. ஒவ்வொரு தடவையும் அந்த வலியோட ஓவர்கம் பண்ணி வந்துட்டு தான் இருக்கேன். ஆனா இப்போ உனக்கு சந்தோஷமே கிடையதுடான்னு கடவுள் நெனச்சிட்டான் போல” என ஒரு ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.
அதோடு,
இப்படி பல்வேறு ட்வீட்களைப் போட்டிருந்தார். இதனைப் பார்த்த சிலர் பாலாவுக்கு காதல் தோல்வி என்று கூறினார்கள். ஆனால் தனக்கு அப்படி எதும் இல்லை என்றும், வீட்டில் பிரச்னை எல்லோரும் தன்னை வெறுக்கிறார்கள் என பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் பாலா. இதனை அறிந்த சக விஜய் ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து, #RIPBala என்ற ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”