நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சந்தித்த வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த வேண்டுமென, உடனடியாக சென்னைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சென்னையில் உள்ள விஜய்யின் வீடுகளில் சோதனைகள் நடைபெற்றன. ஒருவழியாக நேற்று மாலை முடிவுக்கு வந்த இந்த சோதனையில் விஜய்யிடமிருந்து ரொக்கமாக எதுவும் கைப்பற்றவில்லை என வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...
இந்நிலையில் விஜய் வீட்டில் சோதனை நடந்து வரும் போது, #WestandwithThalapathyVijay என்ற ஹேஷை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் விஜய் ரசிகர்கள். அதோடு வருமானவரி சோதனை குறித்து முன்பு அஜித் சொன்ன விஷயங்களும் ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தப் பிறகு, “வீட்டில் இருந்த பொருட்களில் பாதியை எங்கே வைத்திருக்கிறோம் எனத் தெரியாமல் இருந்தது. வருமானவரிச் சோதனையின் மூலம் காணாமல் போன அனைத்துப் பொருட்களும் கிடைத்து விட்டன. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேனே தவிர அதிர்ச்சியடையவில்லை. நான் முறை தவறி எதையும் வைத்திருக்கவில்லை” என்று பழைய பேட்டி ஒன்றில் கூறியிருப்பார் அஜித்.
அதே போல் இன்னொரு பேட்டியில் சுங்கவரி மற்றும் இதர வரிகளை உயர்த்துவதற்கு பதிலாக, பிரபலங்களில் வீடுகளை ஆய்வு செய்ய வேண்டும். பொதுநிதியை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், அந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். இதனால் நாட்டின் பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
விஜய் வீட்டில் சோதனை நடந்த போது, மேற்கூறிய அஜித்தின் பேட்டிகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார்கள் ரசிகர்கள்.