குரூப் 2 ஏ முறைகேடு – முன்ஜாமீன் கோரிய தலைமைச் செயலக பெண் ஊழியர் மனுவுக்கு விளக்கமளிக்க உத்தரவு

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி, தலைமைச் செயலக பெண் ஊழியர் தாக்கல் செய்த மனுவுக்கு பிப்ரவரி 13 ஆம் தேதி விளக்கமளிக்க சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி என் பி எஸ் சி குரூப் 2 ஏ மற்றும்…

By: Updated: February 7, 2020, 03:07:47 PM

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி, தலைமைச் செயலக பெண் ஊழியர் தாக்கல் செய்த மனுவுக்கு பிப்ரவரி 13 ஆம் தேதி விளக்கமளிக்க சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி என் பி எஸ் சி குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி, பலரை கைது செய்து வருகின்றனர்.

அமைச்சர் மீது ஆதாரமற்ற புகார்; வாட்ஸ்அப்பில் மறுப்பு தெரிவிக்க உறுதி அளித்ததால் ஜாமீன்

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ முறைகேடு நடைபெற்றதாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடும் என முன்ஜாமீன் கேட்டு, தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் கவிதா, என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் குரூப் 2 ஏ தேர்வு எழுதியதாகவும், தன்னுடன் அதே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய விக்னேஷ், சுதா மற்றும் சுதா தேவி ஆகியோரை முறைகேடு புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதைப் போல தன்னை கைது செய்யக் கூடும் என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.

நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…

அந்த தேர்வில் தான் தரவரிசையில் 48வது இடம் பிடித்ததாகவும் நான் முதுகலை பட்டதாரியான தான் தகுதியின் அடிப்படையில் இந்த பணியில் சேர்ந்ததாகவும் எந்த விதி முறைகேடுகளில் ஈடுபடவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த நான், தற்போது மகப்பேறு விடுப்பில் உள்ளதாகவும், கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தான் ஆண் குழந்தையை பிறந்துள்ளது, எனக்கு தற்போது மருத்துவ உதவிகளும், குழந்தைக்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் வரை தாய் பாலும் கட்டயாம் அளிக்க வேண்டும் என மருத்துவர் தெரிவித்துள்ளனர். மத்திய குற்றபிரிவு காவல்துறையின் விசாரணைக்கு தான் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாகவும், ஆதாரங்கள், மற்றும் சாட்சிகளை கலைக்க மாட்டேன் எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

விஜய்யின் அசையா சொத்து; பிகில் சம்பளம் எவ்வளவு? – வருமான வரித்துறை விரிவான அறிக்கை

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மகப்பேறு விடுப்பில் மனுதரார் உள்ளதாகவும் 10 நாட்கள் முன்பு தான் குழந்தை பிறந்துள்ளாது. எனவே இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு குறித்து விளக்கமளிக்க அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Group 2a exam fraud case madras high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X