கொரோனா பயத்துக்கு இடையில் எஸ்பிபி-க்கு இறுதி மரியாதை செலுத்திய விஜய்!

‘பிரியமானவளே’ படத்தில் விஜய்யின் தந்தையாகவும் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.

By: Updated: September 26, 2020, 02:32:18 PM

SP Balasubrahmanyam:  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சென்னை அரும்பாக்கத்திலுள்ள, தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

யாராலும் வெறுக்கப்படாத கலைஞன்! மனிதநேய மாண்பாளன்! இளையநிலா எஸ்.பி.பி

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 14-ம் தேதி அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு செய்த பரிசோதனையில் எஸ்.பி.பி-க்கு கொரோனோ நெகட்டிவ் எனக் கண்டறியப்பட்டது. ஆனால் நுரையீரல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் எஸ்.பி.பி-யின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பாடும்நிலா தனது குரலை, காற்றில் கலக்கச் செய்தது. இதனால் பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பிரபலங்கள் பலர் வீடியோக்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கலையும், எஸ்.பி.பி-யுடனான தங்கள் நினைவலைகளையும் பகிர்ந்துக் கொண்டனர்.

தவிர, எஸ்பிபி-யின் உடல் கோடம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரபலங்கள் பலர் எஸ்பிபி-யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து போலீஸ் அணிவகுப்புடன் எஸ்.பி.பி-யின் உடல் நல்லடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அங்கு நடிகர் விஜய் அங்கு நேரில் சென்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது காலை தொட்டு வணங்கி மரியாதை செய்தார். பின்னர் எஸ்.பி.பி-யின் மகனான சரணிடம் துக்கம் விசாரித்து, ஆறுதல் அளித்தார்.

எஸ்.பி.பி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதும் முதல் ஆளாக மருத்துவமனைக்கு கமல் விரைந்தார். இருப்பினும் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை. நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று எஸ்பிபி-யின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். வேறெந்த (முன்னணி) நடிகர்களும் எஸ்.பி.பி-க்கு நேரில் அஞ்சலி செலுத்தவில்லை.

குரல் தேர்வு முதல் கின்னஸ் சாதனை வரை: எஸ்பிபி சகாப்தம்

மற்ற நடிகர்களைப் போலவே விஜய்க்கும், எஸ்.பி.பி நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார். அதோடு ‘பிரியமானவளே’ படத்தில் விஜய்யின் தந்தையாகவும் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி. அதில் அவர்கள் இருவரும் ஃப்ரெண்ட்லியான அப்பா – மகன் உறவை திரையில் பிரதிபலித்தது குறிப்பிடத்தக்கது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Thalapathy vijay paid his last respect to sp balasubrahmanyam singer spb

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X