விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அந்நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர், அதன் பிறகும் சர்ச்சைகளை விடவில்லை. அண்மையில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் நெபோட்டிஸ தயாரிப்புகள், என தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்தார். இந்த விவகாரம் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, மற்றும் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா ஆகியோரையும் மீரா மிதுன் கடும் விமர்சனம் செய்தார். இதனால் கடும் கோபமடைந்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள், மீரா மிதுனை சமூக வலைதளங்களில் விமர்சித்து செய்து வருகின்றனர்.
உள்ளுக்குள் சொல்ல முடியாத வலி: புன்னகையால் ‘டீல்’ செய்யும் ஹரிப்ரியா
இந்நிலையில் மீரா மிதுனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாரதி ராஜா. அதில், “சமீபத்தில் நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசி அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வது, கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போல எனத்தெரிவித்துள்ள அவர், தமிழ்சினிமா வெளியில் ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளதோ என அச்சம் எழுகிறது.
கவர்ச்சிகரமான சினிமா துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு விஜய் மற்றும் சூர்யா தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பாரதிராஜா, அவர்களின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண் முன்னே கண்ணாடி போல் நிற்கிறது” என கூறியுள்ளார். எனவே அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல எனவும் பாரதிராஜா கண்டித்துள்ளார்.
சிறிய பெண்ணான மீரா மிதுன் பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் “மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி. எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்”என தெரிவித்துள்ளார்.
தேன்மொழி பி.ஏ: மருமகளுக்கு செஞ்ச கொடுமைக்கு, மகள் பலிகடா ஆகிட்டாளே…
இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள மீரா மிதுன், நான் புகழுக்காக எதுவும் செய்யவில்லை, பொறுப்பான குடிமகனாக நடந்து கொள்ளுங்கள், என்னை இச்சமூகத்திற்கு தவறானவளாக காட்சிப்படுத்தாதீர்கள், ரசிகர் மன்ற தலைவர்கள் என்ற பெயரில் ரவுடிசம் செய்பவர்கள் குறித்து விஜய் மற்றும் சூர்யாவிடம் கேளுங்கள்” என பதிலளித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”