Advertisment
Presenting Partner
Desktop GIF

கொரோனா ஊரடங்கு : 60 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா

இது போன்ற இக்கட்டான சூழலில் மற்றவர்களுக்கு உதவுவது பெரும் வரவேற்பினையும் பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The Deverakonda foundation and Vijay Deverakonda help over 60 thousand families during lockdown

The Deverakonda foundation and Vijay Deverakonda help over 60 thousand families during lockdown

The Deverakonda foundation and Vijay Deverakonda helped 60 thousand families during lockdown : அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்கள் மூலமாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தேவரகொண்டா அறக்கட்டளை ஒன்றை துவங்கியுள்ளார் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.

Advertisment

இந்த அறக்கட்டளை மூலமாக சுமார் 17 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறக்கட்டளை மூலமாக இதுவரை ரூ. 1.7 கோடி செலவில் 17,723 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் இந்த அறக்கட்டளையுடன் இணைந்து 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு உதவி செய்துள்ளனர்.

மேலும் எவ்வாறு மக்கள் மத்தியில் நிதி பெறப்பட்டது, அது எவ்வாறாக கையாளாப்படுகிறது என்பது தொடர்பாக தினமும் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடுகிறது. இந்த அறக்கட்டளை இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பு திட்டங்களையும் உருவாக்கித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : 2 மாதங்கள் பாலைவனத்தில் தவித்த ப்ரித்விக்கு கொரோனா டெஸ்ட்; முடிவு என்ன தெரியுமா?

பாலிவுட் நடிகர் சோனு சூட் புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதே போன்று விஜய் தேவரகொண்டாவும் அறக்கட்டளை மூலமாக பெரிய அளவில் பல நற்காரியங்களை மேற்கொண்டு வருகிறார். பிரபலங்கள் இது போன்ற இக்கட்டான சூழலில் மற்றவர்களுக்கு உதவுவது பெரும் வரவேற்பினையும் பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment