Advertisment

Goat Movie Review Updates: தியேட்டருக்கு படை எடுக்கும் ரசிகர்கள்; முதல் நாளிலே ரூ100 கோடியை நெருங்கும் ‘தி கோட்’

THE GOAT Review Live Updates- ‘தி கோட்’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வியாழக்கிழமை (செப்.5) மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிகளை திரையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வியாழக்கிழமை 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Govt permit special show screening GOAT movie Vijay Tamil News

Goat Movie Review Live Updates

The Goat Movie Tamil Review Live Updates| வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட்திரைப்படம் இன்று (செப்.5) திரையரங்குகளில் வெளியானது.

Advertisment

இந்தப் படத்தில் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Tamil News Today Live

ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளது.

Read in English: GOAT Release and Review Live Updates: Vijay-starrer eyes Rs 100 crore opening at the global box office

  • Sep 05, 2024 20:43 IST
    ரூ.30 கோடி வசூலை நெருங்கிய கோட்

    வர்த்தக வலைத்தளமான Sacnilk இன் ஆரம்ப மதிப்பீட்டின்படி, விஜய் நடித்த The Greatest of All Time இதுவரை இந்தியாவில் ரூ.27.39 கோடி சம்பாதித்துள்ளது.



  • Sep 05, 2024 17:49 IST
    தளபதி ரசிகனாக இருந்து இளையதளபதி ரசிகனாக மாறுகிறேன் – இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து

    கோட் படம் பார்த்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, தனது எக்ஸ் பக்கத்தில், "மாஸ். தளபதி ரசிகனாக இருந்து இளையதளபதி ரசிகனாக மாறுகிறேன் கத்திக்குப் பிறகு எனக்குப் பிடித்த விஜய் சார் படம்!!" என்று பதிவிட்டுள்ளார்



  • Sep 05, 2024 17:19 IST
    இந்திய அளவில் 20 கோடியை தாண்டிய தி கோட்

    வர்த்தக இணையதளமான Sacnilk இன் ஆரம்ப மதிப்பீட்டின்படி, விஜய் நடித்த The Greatest of All Time இதுவரை இந்தியாவில் ரூ.21.68 கோடி சம்பாதித்துள்ளது.



  • Sep 05, 2024 16:18 IST
    ரூ.20 கோடி வசூலை நெருங்கும் தி கோட்

    வர்த்தக இணையதளமான Sacnilk இன் ஆரம்ப மதிப்பீடுகளின்படி, விஜய் நடித்த The Greatest of All Time இதுவரை இந்தியாவில் ரூ.18.2 கோடியை ஈட்டியுள்ளது.



  • Sep 05, 2024 15:57 IST
    சூப்பர் கமர்ஷியல் பேக்கேஜ் - கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி

    வெள்ளிக்கிழமையன்று GOAT படத்தைப் பார்த்த கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி, தனது எக்ஸ் பக்கத்தில் "#GOAT அருமையான கமர்ஷியல் பேக்கேஜ்! இந்தப் படத்தை நான் மிகவும் ரசித்தேன்....!! ஒட்டுமொத்த டீமிற்கும் வாழ்த்துக்கள்.. .அனைத்து ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் கண்டிப்பாக பார்க்கவும்!!! என்று பதிவிட்டுள்ளார்



  • Sep 05, 2024 15:47 IST
    தி கோட் படம் பார்க்க வந்த 1000 ரசிகர்களுக்கு சிக்கன் பிரியாணி

    காஞ்சிபுரத்தில் விஜய்யின் தி கோட் திரைப்படம் பார்க்க வந்த 1000 ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சூடான சிக்கன் பிரியாணி வழங்கினர்.



  • Sep 05, 2024 15:15 IST
    விஜய்க்கு என்னுடைய அன்பை காட்ட இப்படியொரு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி - யுவன் சங்கர் ராஜா

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் தி கோட் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தி கோட் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா: “உங்கள் அன்புக்கு நன்றி... தளபதி விஜய்க்கு என்னுடைய அன்பை காட்ட இப்படியொரு வாய்ப்பினை கொடுத்த AGS தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. என்னுடைய ஃபேவரட் அண்ணன் வெங்கட் பிரபு இல்லையென்றால் இது நிச்சயம் நடந்திருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.



  • Sep 05, 2024 15:05 IST
    விஜய்யின் ‘தி கோட்’ படத்திற்கு உண்மையான ‘கோட்’டுடன் வந்த நடிகர் கூல் சுரேஷ்

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று வெளியான "தி கோட்" திரைப்படத்தைப் பார்க்க, பிக் பாஸ் பிரபலம் நடிகர் கூல் சுரேஷ் உண்மையான  ‘கோட்’டுடன் திரையரங்கிற்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 



  • Sep 05, 2024 14:57 IST
    இணையத்தில் லீக் ஆன தி கோட்; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

    விஜய்யின் தி கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் ஒரு காட்சி மட்டுமே முடிந்துள்ள நிலையில், தி கோட் முழு படமும் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



  • Sep 05, 2024 14:15 IST
    விஜய்யின் தி கோட் படத்தில் கேப்டன் ஏ.ஐ காட்சி - பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

    விஜய்யின் தி கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்த் வரும் ஏ.ஐ காட்சி குறித்து பிரேமலதா விஜயகாந்த் விஜய்க்கு மனப்பூர்வமான வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Sep 05, 2024 14:04 IST
    விஜய் படத்தின் தலைப்பில் 'சனாதனம்'? வி.சி.க எம்.பி கேள்விக்கு புஸ்ஸி ஆனந்த் பதில்

    நடிகர் விஜய்யின் தி கோட் படம் வெளியாகி உள்ள நிலையில், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம்? என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் பதிவிட்டுள்ளார். இது குறித்த கேள்விக்கு த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், படத்தை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



  • Sep 05, 2024 13:57 IST
    சென்னையில் தி கோட் படத்தைப் பார்க்க திரையரங்குக்கு வந்த நடிகை திரிஷா

     

    விஜய்யின் தி கோட் படத்தைப் பார்க்க நடிகை திரிஷா சென்னை மதுரவாயலில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கிற்கு வந்தார். நடிகை திரிஷா, விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • Sep 05, 2024 13:54 IST
     கேரளா: தி கோட் ரிலீஸ் -  திரையரங்கின் முன் குத்தாட்டம் போட்ட பாட்டி

    விஜய்யின் தி கோட் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் திரையரங்கின் முன் டான்ஸ் ஆடி வருகின்றனர். கேரளாவில் தி கோட் படம் வெளியான ஒரு திரையரங்கின் முன், விஜய்யின் இளம் ரசிகர்களுடன் ஒரு பாட்டி குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



  • Sep 05, 2024 13:40 IST
    விஜய் ரொம்ப ரொம்ப புடிக்கும் - ஜப்பான்ல விஜய்க்கு ஃபேம் அதிகம் - ஜப்பான் ரசிகை

    விஜய்யின் தி கோட் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள நிலையில், ஒரு ஜப்பான் ரசிகை, விஜய் ரொம்ப புடிக்கும், ஜப்பான்ல விஜய்க்கு ஃபேம் அதிகம் என்று கூறியுள்ளார்.



  • Sep 05, 2024 13:35 IST
    விஜய்யின் தி கோட் படத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்; ஸ்டேடியம் ஆன திரையரங்குகள்

    விஜய்யின் தி கோட் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. எக்ஸ் பயனர் ஒருவர் தி கோட் படத்தால், திரையரங்கு ஸ்டேடியமானது என்று பதிவிட்டுள்ளார்.



  • Sep 05, 2024 13:31 IST
    பி.எம். ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்

    "தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது. அந்த கொள்கையை மத்திய அரசு வகுக்கவில்லை. பல்வேறு நிபுணர்கள் கொண்ட குழுதான் உருவாக்கியது. வருங்கால சமுதாயத்தை, இளைஞர்களை கருத்தில் கொண்டு புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்று விட்டன. சில மாநிலங்கள் மெல்ல மெல்ல ஏற்று வருகின்றன. 

    பி.எம். ஸ்ரீ திட்டம் மூலம் கற்றலில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும். கற்றல், கற்பித்தல் திறன் மேம்படும். தமிழக அரசு முதலில் இத்திட்டத்தை ஏற்பதாக அறிவித்தது. ஆனால் தற்போது ஏற்க மறுக்கிறது - ஏற்கும் மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது"  என்று  ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளார். 



  • Sep 05, 2024 13:28 IST
    கோவையில் தி கோட் படம் பார்த்த சிவகார்த்திகேயன்

    நடிகர் விஜய்யின் தி கோட் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், தி கோட் படத்தில் நடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் கோவையில் திரையரங்கில் தி கோட் படத்தைப் பார்க்க வந்தார்.



  • Sep 05, 2024 13:22 IST
    'தி கோட்' -  மானாமதுரையில் தொழில்நுட்ப கோளாறு

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 'தி கோட்' வெளியான திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இடைவேளைக்கு பிறகு ஆடியோ பிரச்சினை ஏற்பட்டதால் ரசிகர்கள் ரகளை செய்தும் கூச்சல், குழப்பத்தை விளைவித்துள்ளனர். 

    பீஸ்ட், லியோ படங்கள் வெளியான போதும் இதே திரையரங்கில் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும், 3 வது முறையாக விஜய் படம் வெளியான போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறி ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். 



  • Sep 05, 2024 12:54 IST
    தி கோட் படம் பார்க்க வந்த ரசிகர்கள்; நோ பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தியதால் போலீசார் அபராதம்

     

    வெற்றி திரையரங்கில், தி கோட் படம் பார்க்க வந்த ரசிகர்கள், வாகனங்களை நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்ததால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.



  • Sep 05, 2024 12:33 IST
    விஜய் படத்தின் தலைப்பில் 'சனாதனம்'? வி.சி.க எம்.பி. ரவிக்குமார் அதிருப்தி

    நடிகர் விஜய்யின் தி கோட் படம் வெளியாகி உள்ள நிலையில், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம்? என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் பதிவிட்டுள்ளார். இது குறித்து வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவில் “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?

    The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? 

    ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! 

    ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?

    எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே 
    (தொல்.சொல். 157)” என்று தெரிவித்துள்ளார். 



  • Sep 05, 2024 12:23 IST
    'தி கோட்' படத்தில் விஜய் பயன்படுத்தும் காரின் நம்பரில் அரசியல் செய்தி - ரசிகர்கள் உற்சாகம்

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பின் வெளியான முதல் படம் 'தி கோட்' படத்தில் விஜய் பயன்படுத்தும் காரின் நம்பரில் அரசியல் சொல்லி இருப்பதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தி கோட் படத்தில் TN 07 CM 2026 என்ற எண் கொண்ட காரை படம் முழுக்க விஜய் ஓட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சி தலைவராக விஜய்யின் முதல் படம் என்பதால் காட்சிகளில் அரசியல் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு வலுத்தது.



  • Sep 05, 2024 12:20 IST
    புதுக்கோட்டை திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு - 'தி கோட்' பாதியில் நிறுத்தம்

    விஜய் நடித்த கோட் திரைப்படம் புதுக்கோட்டையில் 2 திரையரங்குகளில் வெளியானது. இதில் ஒரு திரையரங்கில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கோட் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஆடியோ பிரச்னை காரணமாக 12 மணி காட்சி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு அடுத்த காட்சி திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 05, 2024 11:57 IST
    கோட் படத்தில் திரிஷா


  • Sep 05, 2024 11:54 IST
    விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?



  • Sep 05, 2024 11:26 IST
    ஸ்டேடியம் ஆன தியேட்டர்: தோனி கிளிம்ப்ஸ்



  • Sep 05, 2024 10:35 IST
    ’தி கோட்’ படத்தில் சிவகார்த்திகேயன் : ரசிகர்களுக்கு சர்பிரைஸ்



  • Sep 05, 2024 10:08 IST
    பாலக்காடு அரோமா திரையரங்கில் 'தி கோட்' கொண்டாட்டம்



  • Sep 05, 2024 10:04 IST
    கமலா திரையரங்கில் வெங்கட் பிரபு



  • Sep 05, 2024 09:33 IST
    'தி கோட்' விஜயகாந்த் ஏ.ஐ. லுக்ஸ்



  • Sep 05, 2024 08:52 IST
    வெங்கட் பிரபு கொன்னுட்டாப்புல- தி கோட் ஃபேன்ஸ் ரிவ்யூ



  • Sep 05, 2024 08:44 IST
    ட்விஸ்ட் வந்துட்டே இருக்கு; சீட்ல உட்காரவே முடியல - தி கோட் ஃபேன்ஸ் ரிவ்யூ

    Credit: Thanthi TV



  • Sep 05, 2024 08:43 IST
    'தி கோட்' பார்க்க வந்த சிவகார்த்திகேயன்

    Credit: Cineulagam



  • Sep 05, 2024 08:02 IST
    2nd half அடிப்பொலி: கேரளா ஃபேன்ஸ் ரியாக்ஷன்ஸ்

    Credit: Thanthi TV



  • Sep 05, 2024 07:56 IST
    மதுரையில் 48 திரையரங்குகளில் வெளியாகும் கோட் திரைப்படம்

    மதுரையில் 48 திரையரங்குகளில் கோட் திரைப்படம் இன்று வெளியாகின்றது. முதல் நாள் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன



  • Sep 05, 2024 07:55 IST
    மூணு விஜய்; வேற மாதிரி; பக்கா மாஸ்: தி கோட் ஆடியன்ஸ் ரிவ்யூ

    Credit: Trend Facts



  • Sep 05, 2024 07:52 IST
    கேப்டன் பிரபாகரன் காலத்து விஜயகாந்த்

    Credit: Shruti TV



  • Sep 05, 2024 07:46 IST
    தளபதி டீ ஏஜிங் லுக் தரம்

    செகண்ட் ஆஃப், பிளாக் பஸ்டர் டா டேய்

    ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட்

    தளபதி டீ ஏஜிங் லுக் தரம்

    சொல்லி அடித்த யுவன்

    படத்தின் கடைசி 40-45 நிமிடங்கள் (பைசா வசூல்)

    மொத்தத்தில் - தளபதி ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் !!



  • Sep 05, 2024 07:42 IST
    விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அஜித்



  • Sep 05, 2024 07:39 IST
    ‘தி கோட்’ படத்தின் சிறப்பு காட்சி

    தி கோட்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வியாழக்கிழமை (செப்.5) மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிகளை திரையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வியாழக்கிழமை 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளன.



Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment