Advertisment

Tamil Breaking News Highlights: பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல்முறையாக ஜுடோவில் பதக்கம்: வெண்கலம் வென்ற கபில் பர்மர்

Tamil News Live Updates-05-09-2024: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kapilpa

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 172-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க பாதுகாப்பு

கடல் பகுதி வழியாகத் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க பாதுகாப்பு ஒத்திகை. தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று காலை சாகர் கவாச் என்ற 2 நாள் பாதுகாப்பு ஒத்திகையை கன்னியாகுமரியில் தொடங்கினர். 

The GOAT Review Live Updates: ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட்; விஜய்யின் 'தி கோட்' எப்படி இருக்கு?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Sep 05, 2024 21:05 IST
    தமிழக மீனவர்களுக்கு 1.5 கோடி அபராதம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

    “தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிப்பதாக உள்ளது. 12 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ₹1.5 கோடி அபராதம் விதித்துள்ளது, துயரத்தில் உள்ளவர்களை மிகவும் வேதனைக்குள்ளாக்குவதாக உள்ளது. மீன்பிடி படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்கவும், மனிதாபிமான அடிப்படையில் அபராதத் தொகையை தள்ளுபடி செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.



  • Sep 05, 2024 20:55 IST
    பாராலிம்பிக்: இந்திய வீரர் கபில் பர்மர் வெண்கலப்பதக்கம்

    பாராலிம்பிக் ஜூடோ 60 கிலோ எடை பிரிவில், 10-0 என்ற புள்ளி கணக்கில் பிரேசில் வீரரை வீழ்த்திய இந்திய வீரர் கபில் பர்மர் வெண்கலப்பதக்கம் வென்றார்.



  • Sep 05, 2024 20:53 IST
    தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் நடராஜர் கோவில்: வருமானம் பற்றி அறநிலையத்துறை வழக்கறிஞர் பேட்டி

    ”சிதம்பரம் நடராஜர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் போது ஆண்டுக்கு ₹3.25 கோடி வரை வருமானம் வந்தது.. தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் சென்றதும் ஆண்டு வருமானம் ₹2 லட்சம் என கணக்கு காட்டப்பட்டுள்ளது என அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் கூறியுள்ளார்.



  • Sep 05, 2024 19:48 IST
    வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: 3 நாட்களில் மழைக்கு வாய்ப்பு

    வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களில் வடக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Sep 05, 2024 19:46 IST
    தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல்

    தெலங்கானா மாநிலம் ரகுநாதபாலம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் - அதிரடிப்படை இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்ததில்,  6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன



  • Sep 05, 2024 19:45 IST
    தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறை இயக்குநராக பதவி உயர்வு

    "கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் சிறப்புற செயல்பட்ட தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா, இந்திய தொல்லியல் துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" என நிதியமைச்சர்தங்கம் தென்னரசு, கூறியுள்ளார்.



  • Sep 05, 2024 19:44 IST
    சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

    தொடர் லஞ்சப் புகார் எழுந்து வந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ₹66,000 பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.



  • Sep 05, 2024 18:51 IST
    பா.ஜ.க.வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா

    பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனவைி, ரிவாபா ஜடேஜா, குஜராத்தின் ஜாம் நகர் பா.ஜ.க எம்.எல்.ஏ.வாக இருக்கும் நிலையில், தற்போது ஜடேஜா, பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.



  • Sep 05, 2024 17:54 IST
    ஹேமா கமிட்டி அறிக்கை – சிறப்பு அமர்வு அமைப்பு

    ஹேமா கமிட்டி அறிக்கையை சிபிஐ விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு அமர்வில் நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் உள்ளனர். ஹேமா கமிட்டியின் விரிவான அறிக்கையை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 



  • Sep 05, 2024 17:21 IST
    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Sep 05, 2024 16:52 IST
    வாகனம் கவிழ்ந்த விபத்தில் 4 ராணுவ வீரர்கள் மரணம்

    சிக்கிமில் சாலையோர பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்



  • Sep 05, 2024 16:17 IST
    சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்

    திருச்சி சைபர் க்ரைம் தொடர்ந்த வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு ஐகோர்ட் கிளை முன்ஜாமீன் வழங்கியது



  • Sep 05, 2024 15:54 IST
    லாரியில் மளமளவென பரவிய தீ - மயிலாடுதுறையில் பரபரப்பு  

    மயிலாடுதுறையில் லாரியில் இருந்த வைக்கோல் தீப்பிடித்தது தெரியாமல், சுமார் 1 கி.மீ. ஓட்டுநர் ஓட்டிச்சென்றுள்ளார். தீ பிடித்தது தெரிந்ததும் குளத்தில் லாரியை இறக்கி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். லாரியில் தீ மளமளவென பரவியதால், தீக்காயங்களுடன் கீழே ஓட்டுநர் குதித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



  • Sep 05, 2024 15:27 IST
    951 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு: 20 ஆண்டு சிறை 

    மதுரையில் கடந்தாண்டு 951 கிலோ கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம்  விதித்து மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்தாண்டு எஸ்.எஸ். காலணி பகுதியில் 951 கிலோ கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் பிரபாகரன், செந்தில் பிரபு, ராஜ்குமார் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 



  • Sep 05, 2024 15:12 IST
    கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை: மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கை 

    கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தப்பட்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 



  • Sep 05, 2024 15:11 IST
    திரைத்துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை - பிரேமலதா கருத்து

    "பசுத் தோல் போர்த்திய புலியாக பெரிய மனிதர்கள் போர்வையில் இருந்துகொண்டு பலரும் தவறு செய்கின்றனர்" என்று திரைத்துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவது குறித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். 



  • Sep 05, 2024 15:11 IST
    ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

    திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சமூக வலைதளத்தில் அருவருக்கத்தக்க வகையில் பதிவு செய்த, ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    'அனைத்து கமெண்ட்களையும் பார்க்கும் போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமையாகவே பார்க்க முடிகிறது' என்று நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். 

    நாம் தமிழர் கட்சி நிர்வாகி இவ்வழக்கில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் நேரடியாக எதுவும் கமெண்ட் செய்யாததால் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 



  • Sep 05, 2024 14:07 IST
    கெஜ்ரிவால் ஜாமின் மனு - சி.பி.ஐ எதிர்ப்பு

    மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிதா, மணிஷ் சிசோடியா ஆகியோர் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என அணுகிய பிறகே உச்ச நீதிமன்றம் வந்தனர்' என்று சிபிஐ தரப்பு வாதம் வைத்துள்ளது.

    'வழக்கு தொடர்பாக வாதாடுங்கள். ஜாமின் கோரி எந்த நீதிமன்றத்தை முதலில் அணுக வேண்டும் என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 

    'வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விதத்தையே நாங்கள் எதிர்க்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றால், அதன் பிறகு வாதிட ஒன்றும் இல்லை' என்று சிபிஐ தரப்பு வாதம் வைத்துள்ளனர். வழக்கின் விசாரணை பிற்பகலும் தொடர உள்ளது

     



  • Sep 05, 2024 14:06 IST
    மோடிக்கு எல்.முருகன் நன்றி 

    "உலக தமிழர்களை இணைக்கும் பாலம்" என குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று  அறிவித்துள்ள, பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்துள்ளார். 

     



  • Sep 05, 2024 14:03 IST
    "த.வெ.க.வை தடுத்து நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல" - அமைச்சர் எ.வ. வேலு

    தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல. தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை" என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 



  • Sep 05, 2024 13:59 IST
    அ.தி.மு.க-வுடன் கூட்டணி? - நயினார் நாகேந்திரன் பதில் 

    "2026 தேர்தலில் அ.தி.மு.க-வுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான்" என்று நெல்லையில் பா.ஜ.க சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.



  • Sep 05, 2024 13:31 IST
    'எல்லா துறைகளிலும்தான் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்' - நடிகை குஷ்பு

    “எல்லா துறைகளிலும்தான் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கின்றன. அது எதிலும் கேள்வி கேட்காமல், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என சினிமா துறையை மட்டும் பிடித்து கொள்கிறார்கள்? அனைத்து துறைகளிலும் ஹேமா கமிட்டி போன்றொரு கமிட்டி இருக்க வேண்டும்” என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். 

     



  • Sep 05, 2024 13:23 IST
    'தி கோட்' - புதுக்கோட்டையில் தொழில்நுட்ப கோளாறு

    புதுக்கோட்டையில் விஜய் நடித்த 'தி கோட்' படம் வெளியான திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. ஒரு மணிநேரம் மட்டுமே ஓடிய படம் ஆடியோ பிரச்சினையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரை மணிநேரத்திற்கும் மேலாக படம் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் ரசிகர்கள் கூச்சலிட்டனர். புதுக்கோட்டையில் 2 திரையரங்குகளில் 'தி கோட்' படம் வெளியானது



  • Sep 05, 2024 13:21 IST
    'தி கோட்' -  மானாமதுரையில் தொழில்நுட்ப கோளாறு

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 'தி கோட்' வெளியான திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இடைவேளைக்கு பிறகு ஆடியோ பிரச்சினைஏற்பட்டதால் ரசிகர்கள் ரகளை செய்தும் கூச்சல், குழப்பத்தை விளைவித்துள்ளனர். 

    பீஸ்ட், லியோ படங்கள் வெளியான போதும் இதே திரையரங்கில் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும், 3 வது முறையாக விஜய் படம் வெளியான போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறி ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். 



  • Sep 05, 2024 12:56 IST
    5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி 

    ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி, அவரது கணவருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    1991-96 ஜெயலலிதா அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரா குமாரி, மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்ததாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இந்திராகுமாரி, கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு வழங்கியது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இந்திராகுமாரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்



  • Sep 05, 2024 12:32 IST
    தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 

    அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ளது. 2016ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தி இருந்தால் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 



  • Sep 05, 2024 12:11 IST
    விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் என்ன பிரச்னை?

    விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் என்ன பிரச்னை? - பிரேமலதா  

    விஜய் கட்சியின்  மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை. மாநாடு நடத்த உரிய முறையில் அனுமதி கேட்டால் அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை-  பிரேமலதா  



  • Sep 05, 2024 11:47 IST
    GOAT என்ற தலைப்பு சனாதனக் கருத்தில்லையா? - ரவிக்குமார் 

    GOAT என்ற தலைப்பு சனாதனக் கருத்தில்லையா?  - ரவிக்குமார் 

    The Greatest of All Time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?  காலமெல்லாம் பெரியது இதுதான் என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்று தானே அர்த்தம். என்றும் மாறாதது என்பது தானே சனாதனம் என்ற சொல்லின் பொருள். இதை தெரிந்து தான் விஜய் படத்துக்கு தலைப்பு வைத்தார்களா? - வி.சி.க. எம்.பி ரவிக்குமார் 



  • Sep 05, 2024 11:25 IST
    சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்

    இந்தியாவின் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது

    அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் திருவள்ளுவர் கலாசார மையம் குறித்து அறிவித்தார்

    உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் நிறுவப்படும் என மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் பாஜக அறிவித்திருந்தது 

    இந்தியாவின் கலாசாரத்தை வெளிப்படுத்த, யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள், பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக கலாசார மையம்



  • Sep 05, 2024 11:22 IST
    சென்னையில் புதிய போக்குவரத்து நடைமுறை

    சென்னையில் கொண்டுவரப்படவுள்ள புதிய போக்குவரத்து நடைமுறை

    சென்னையில் ஒலி மாசை கட்டுப்படுத்த சிக்னலில் தண்டனை என்ற புதிய நடவடிக்கையை மேற்கொள்ளப்பட உள்ளது.  சிக்னல்களில் டெசிபல் மீட்டர்கள் பொருத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவைவிட சத்தம் அதிகமாக இருந்தால் தொடர்ந்து சிவப்பு விளக்கு மட்டுமே எரியும் வகையில் கொண்டுவரப்பட உள்ளது.  



  • Sep 05, 2024 10:25 IST
    ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி திட்ட ஒப்பந்தம்

    சிகாகோவில் ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி அளவிலான திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்; ட்ரில்லியண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டு மையத்தை நிறுவ உள்ளது.

    நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை. சென்னையில் தயாரிப்பு, வடிவமைப்பு மைத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேச்சுவார்த்தை



  • Sep 05, 2024 09:29 IST
    திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

    தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் THE GOAT திரைப்படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ள நிலையில், முக்கிய திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

    கூட்டத்தை கட்டுபடுத்தவும், அசாம்பாவிதங்களை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆணையர்கள் மேற்பார்வையில், 3 காவல் ஆய்வாளர்கள் தலையில், 6 உதவி ஆய்வாளர்கள் உட்பட 30 மேற்பட்ட காவல்துறையினர் ஒவ்வொரு திரையரங்கிலும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 



  • Sep 05, 2024 08:45 IST
    சிங்கப்பூர் பிரதமருடன் மோடி சந்திப்பு 

    சிங்கப்பூர் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு 

    சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் உடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு. இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பின் போது இந்தியா- சிங்கப்பூர்இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment