The legend Arul Saravanan preparing for next movie: ‘தி லெஜண்ட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பைத் தொடங்கியுள்ள அருள் சரவணன் விரைவில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் ஹீரோவாக அறிமுகமானப் படம் ’தி லெஜண்ட்’. ஜெடி – ஜெர்ரி இயக்கிய இந்தப் படத்தில் ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ‘என் கணவர் நிலை யாருக்கும் வரக்கூடாது’: உடல் உறுப்பு தானம் செய்யும் நடிகை மீனா
பான் இந்தியா முறையில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் கடந்த ஜூலை 28 ஆம் தேதி 2500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 600-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது. ஆனால், படம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில், முதல் படமான ‘தி லெஜண்ட்’ சரியான வரவேற்பைப் பெறாத நிலையில், அடுத்தகட்டமாக புதிய படம் ஒன்றில் நடிக்க அருள் சரவணன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் இயக்குநர்களை சந்தித்து தனது அடுத்தபடம் குறித்த கதைகளை கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
முதல் படம் வரவேற்பு பெறவில்லை என்றாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று அருள் சரவணன் அறிவித்திருந்தார். இதனை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் அருள் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”விரைவில் ஊடகவியலாளர்களை சந்திக்கிறேன்” என பதிவிட்டு இருந்தார். இதனால், விரைவில் தனது புதிய படத்தின் அறிவிப்பை அருள் சரவணன் வெளியிடுவார் எனத் தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil