தயாரிப்பாளர் சங்க தேர்தல்: டி.ராஜேந்தரை தோற்கடித்த தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி!

இந்த தேர்தலில் நடிகர்கள் கமல், சசிகுமார், சமுத்திரக்கனி, விமல், சேரன் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் நடிகர்கள் கமல், சசிகுமார், சமுத்திரக்கனி, விமல், சேரன் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.

author-image
WebDesk
New Update
Thenandal Films Murali Ramasamy Elected as Producer Council President

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி - டி.ராஜேந்தர்

தமிழ் திரைப்பட சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

Advertisment

2020-22-ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நேற்று, சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

இன்னும் 24 மணி நேரத்தில் ’நிவர்’ புயல்: அதிக கனமழை எச்சரிக்கை

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ஆகியோர் இரு அணிகளாக போட்டியிட்டனர். தயாரிப்பாளர் தேனப்பன் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் நடிகர்கள் கமல், சசிகுமார், சமுத்திரக்கனி, விமல், சேரன் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.

Tamil News Today Live : திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்… தடையை கடந்து பரப்புரை தொடரும் என அறிவிப்பு!

Advertisment
Advertisements

தவிர துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 26 பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 1303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 1050 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். இந்நிலையில், இன்று இதன் முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன. அதன்படி, தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி. 337 வாக்குகள் பெற்று 220 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் டி.ராஜேந்தர். தேனப்பன் 87 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: